- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி படத்தில் ரஜினியுடன் மோதும் வாய்ப்பை இழந்த நடிகை இவரா - அடடா நல்ல வாய்ப்பை...

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் மோதும் வாய்ப்பை இழந்த நடிகை இவரா – அடடா நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிட்டாரே

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்கள் எப்போதும் ரசிக்கப்படும் எவர்கிரீன் படங்களாக அமைகின்றன. அதில் ரஜினி படங்களுக்கான மாஸ் வேற லெவலில் இருந்து வருகிறது. அதுவும் பாட்ஷா படத்துக்கு பிறகு வந்த ரஜினி படங்கள், கொல மாஸ் சாரே என பாராட்டும்படியான படங்களாகவே பெரும்பாலும் அமைந்தன. சமீபத்தில் வந்த ஜெயிலர் உட்பட பல படங்கள், தரமான சம்பவங்களாக இருந்தன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக, 18 ஆண்டுகளுக்கு முன்வந்த சந்திரமுகி படம் இருந்தது. மணிசித்ரதாழ் என்ற மலையாள படத்தின் தழுவலே இந்த படம். எனினும், தமிழுக்காக பல விதங்களில் மாற்றப்பட்டு, ரஜினிக்காக புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டன. அதுவும் ஜோதிகா நடிப்பு இந்த படத்தில், ரசிகர்களை மிகவும் கவரும்படி இருந்தது. படம் முழுக்க அமைதியாக வரும் அவர், படத்தின் கடைசி 20 நிமிடங்களில், சந்திரமுகியாக மாறி ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

இப்போது மீண்டும் பி வாசு சந்திரமுகி 2 என்ற படத்தை இயக்கி, ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் சந்திரமுகி கேரக்டரில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படம், அந்த சந்திரமுகி படம் போல, பெரிய அளவில் பேசப்படவில்லை. படம் பார்த்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். வடிவேலு காமெடி கூட அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில், ஜோதிகாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிப்பதாக இருந்து, பிறகே ஜோதிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பு, உண்மையிலேயே அந்த நடிகைக்கு கிடைத்திருந்தால், அதுவும் வேற ஒரு மாதிரியான விதத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்க வாய்ப்புள்ளது. ஜோதிகாவை போல அவரும் இன்னும் அதிகமாக ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

இதுகுறித்து நடிகை சிநேகா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அந்த நேர சந்தர்ப்ப சூழலால், நடிக்க முடியாமல் போயிருக்கிறது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேரக்டரில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், ஜோதிகா மிக சூப்பராக செய்திருந்தார். நான் செய்திருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும்.

எப்பவும் லைப்ல இது மிஸ் ஆயிடுச்சு, நான் பண்ண முடியலையேன்னு உட்கார்ந்து நான் பீல் பண்ண மாட்டேன். நான் கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி திடீரென கேன்சல் ஆவது, ஒரு படத்தில் நடிக்க கையெழுத்திட வேண்டிய நேரத்தில் அது கடைசி நேரத்தில் கேன்சல் ஆவது போன்றவை அவ்வப்போது நடப்பதுதான். அதை பற்றி நான் யோசிக்கவே மாட்டேன். ஓகே, பரவாயில்லை, அடுத்தது என்ன என்று அதை பார்க்க ஆரம்பித்து விடுவேன், என்று கூறியிருக்கிறார் நடிகை சிநேகா.

சற்று முன்