- Advertisement -
Homeபொழுதுபோக்குகாவிரி பிரச்னை.. அவங்களோட மன்னிப்பை எல்லாம் ஏத்துக்க முடியாது.. சித்தார்த் அதிரடி.. யாரும் இதை எதிர்பார்க்கல

காவிரி பிரச்னை.. அவங்களோட மன்னிப்பை எல்லாம் ஏத்துக்க முடியாது.. சித்தார்த் அதிரடி.. யாரும் இதை எதிர்பார்க்கல

- Advertisement -

காவிரி ஆற்றிலிருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்பினர் கடந்த வாரம் அந்த மாநிலத்தில் பந்த் அறிவித்திருந்தனர். பந்த்துக்கு முதல் நாள் அதாவது கடந்த 28ஆம் தேதி நடிகர் சித்தார்த் பெங்களூரில் சித்தா படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த சில கர்நாடக அமைப்பினர் தமிழ் படத்துக்கான ப்ரோமோஷன் இங்கு நடக்கக்கூடாது என கூறி அவரை வெளியே அனுப்பினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரகாஷ் ராஜ் சித்தார்த்திடம், கன்னடராக கன்னட மக்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் சிவராஜ்குமாரும் இந்த சம்பவத்துக்காக சித்தார்த்திடம் தனது மன்னிப்பை கேட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சித்தார்த் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

சித்தா சக்சஸ் மீட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், “சித்தா திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறேன். இரண்டு வருட உழைப்பு இது. அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் அடியெடுத்து வைத்திருக்கிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இங்கே எந்த அரசியலையும் பேச வரவில்லை. காவிரி விவகாரம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். எனக்கு என் படம் முக்கியம். என் வயதில் எவனாவது எட்டி உதைத்தால் அதை பற்றி கேட்பேன். சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் எல்லாம் ரொம்ப பெரியவங்க. அவர்களுக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

அந்த மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். கன்னட மக்கள் என் படத்தை ரசித்து பார்க்கிறார்கல். அந்த மாநில சினிமா துறைக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு அமைப்பை சேந்த பத்து பேர்தான் உள்ளே வந்து மிரட்டினார்கல்> அவர்களுடன் மட்டுமே பிரச்னை.

நான் கர்நாடகாவில் ஒரு அனுமதி வாங்கிதான் பிரஸ் மீட் நடத்தினேன். அன்றைக்கு எந்த பந்த்தும் நடக்கவில்லை. நான் பிரஸ் மீட் வைத்த அடுத்த நாள்தான் பந்த நடைபெற்றது. நான் பணம் போட்டு தயாரித்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல போராடுகிறேன். சிவராஜ்குமா, பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டதும் இந்த பிரச்னை குறித்து பேச வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் ஒதுங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளராக நான் இருக்கிறேன். இதுவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. நாளை இதே நிலைமை இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கக்கூடாது” என்றார்.

சற்று முன்