- Advertisement -
Homeபொழுதுபோக்குஆடியோ லான்ச் ரத்து, ஸ்பெஷல் ஷோ அனுமதி இல்லை.. வேற மாதிரி திட்டத்தை கையில் எடுத்திருக்கும்...

ஆடியோ லான்ச் ரத்து, ஸ்பெஷல் ஷோ அனுமதி இல்லை.. வேற மாதிரி திட்டத்தை கையில் எடுத்திருக்கும் லியோ குழு?

- Advertisement -

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்திருக்கிறார் விஜய். லியோ படத்தில் அவருடன் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.

படமானது அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் பார்த்திபன், லியோ என்று இரண்டு விஜய்களை காண்பிக்கிறார்கள். இதன் காரணமாக படத்தில் விஜய்க்கு டபுள் ஆக்‌ஷனா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ஆல்டர் ஈகோ என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆல்டர் ஈகோ என்றால் தனது அடையாளத்தை மறைத்து வேறு இடத்தில் வேறு ஒருவராக வாழ்வது என்று அர்த்தம். இதன் காரணமாக படத்தில் விஜய் கண்டிப்பாக சிங்கிள் ஆக்‌ஷன்தான். தனது அடையாளத்தை மறைத்து த்ரிஷாவுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்வார் அப்போது எதிரிகளால் வரும் பிரச்னையாக படம் விரியும் எனவும் கூறுகிறார்கள்.

இதற்கிடையே த்ரிஷாவு விஜய்யும் பல வருடங்களுக்குப் பிறகு இதில் இணைந்திருக்கின்றனர். இருவரும் படத்தில் கணவன் மனைவியாக வருகிறார்கள். ட்ரெய்லரில் அதையும் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்படி ட்ரெய்லரை ஒருபக்கம் பலரும் கொண்டாடினாலும் விஜய் பேசிய கெட்ட வார்த்தை, லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் ஓவர் டோஸ் வன்முறை ஆகியவைகள் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன.

- Advertisement -

சூழல் இப்படி இருக்க லியோ படத்துக்கான அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்கவில்லை. எனவே முதல் நாளே இரண்டு காட்சிகளை பெய்டு ப்ரீமியர் ஷோவாக திரையிட்டு கல்லா கட்ட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு ஒரு முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் ஒன்று உலாவுகிறது.

அதாவது ஆடியோ லான்ச்சும் நடத்த முடியாத சூழல் நிலவியதால் ரசிகர்கள் சோகமடைந்திருந்தனர். ஒருவழியாக ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே ஒரு ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டை துபாயில் நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். இதில் விஜய் கலந்துகொள்வதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்றும் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்