பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் வருகிற 16 ஆம் தேதி அதாவது நாளை திரைக்கு வரவுள்ள திரைப்படம் “ஆதிபுருஷ்”. இத்திரைப்படம் முழுக்க முழுக்க இராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸிற்கு ஜோடியாக கிரீத்தி செனான் நடித்துள்ளார். மேலும் செயிஃப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்க, டி சீரீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த பொங்கல் அன்றே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோது இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கேலிக்குள்ளாக்கப்பட்டதால் அந்த கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்த இத்திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். அதன் படி இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
“ஆதிபுருஷ்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தபடி இத்திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை தனியாக ஒதுக்கப்படவுள்ளது. இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்போதே சில திரையரங்குகளில் அஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “ஆதிபுருஷ்” வெளியாகும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் அணிந்து வரும் காலணிகளை வெளியே கழட்டி விட்டு திரையரங்கிற்குள் வருமாறு ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழுவினர் யோசித்து வருகின்றனராம். இது எந்தளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.





