- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்த்து சொல்ல போய் படவாய்ப்பை பெற்ற நடிகர் - லியோ படத்தை தொடர்ந்து, வெங்கட்பிரபு படத்திலும்...

வாழ்த்து சொல்ல போய் படவாய்ப்பை பெற்ற நடிகர் – லியோ படத்தை தொடர்ந்து, வெங்கட்பிரபு படத்திலும் நடிக்கிறாரா

- Advertisement -

சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் நடிக்க வந்துக்கொண்டே இருக்கின்றனர். சில பழைய நடிகர்கள், பல ஆண்டுகளாக திரையில் காண முடியாமல் போய் விடுகின்றனர். அதில் ஒரு சிலர் ஓய்வு பெற்ற முன்னாள் நடிகர், நடிகையராகி விடுகின்றனர். ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழில் வாய்ப்பே கிடைக்காமல் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கி, அங்கு தொடரில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஒரு சில மாஜி நடிகர்கள் அவ்வப்போது தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை, தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தாமல் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும், ரசிகர்கள் மத்தியில், அவர்களது மனங்களில் நிலைத்திருக்கவும் முடியும். துணை நடிகராக, காமெடி நடிகர்களில் ஒருவராக நடிப்பவர்களுக்கு இது, மிகவும் பொருந்தும். அவர்களில் ஒருவர்தான் நடிகர் வையாபுரி.

நடிகர் வையாபுரி, தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக இருக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் விஜய்க்கு, அஜீத்துக்கு முக்கிய நண்பர் குழுவில் இவரும் ஒருவராக கண்டிப்பாக இருப்பார். அதைவிட கமல் படங்களில் நிச்சயம் வையாபுரிக்கு என ஒரு கேரக்டர் கிடைத்துவிடும். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால், வையாபுரி அதில் இடம்பிடித்து விடுவார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் வையாபுரி கூறியதாவது, ராஜ்கமல் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்றுக்கொண்டே இருப்பேன். கமல் சார் படங்களில் நிச்சயம் ஏதேனும் ஒரு கேரக்டர் எனக்கு கிடைத்துவிடும். விக்ரம் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது, ஏமாற்றமாகி விட்டது. எனினும், லியோ படத்தில் ஏதேனும் வாய்ப்பு இருக்குமா, என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். இதுகுறித்து ராஜ்கமல் பிலிம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும் லோகேஷ் கனகராஜிடம் பேசி உள்ளனர். வாய்ப்பிருந்தால், வையாபுரியை லியோ படத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஒருமுறை லியோ படப்பிடிப்பின் போது சந்தித்தேன். புத்தாண்டு நேரமாக இருந்ததால், புத்தாண்டு வாழ்த்தும், படத்துக்கும் வாழ்த்து சொன்னேன். அப்போது, படத்துக்கு வாழ்த்துக்கு சொல்லி விட்டு, எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால், நடிக்கும் விருப்பத்தைக் கூறி கொண்டேன். இதன்பிறகு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில நாட்கள் மட்டுமே நடித்தேன். சின்ன கேரக்டர் என்பதால், படத்தின் மற்ற விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. முன்பு போல விஜய் உடன் நிறைய நேரம் பேச முடியவில்லை.

லியோ படத்தில் நான் நடிப்பதாக தகவல் பரவியதால், இப்போது நான்கைந்து படங்களில் நடித்து வருகிறேன். இப்போது, வாழ்த்து சொல்ல போய், வெங்கட்பிரபு படத்திலும் விஜய் 68 படத்திலும் வாய்ப்பு கிடைத்து நடிக்கிறேன். இந்த விஷயத்தையும் விளம்பரத்தில் போட்டு விடுங்க, அப்போ தான் இன்னும் ஐந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என, இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் சொன்னேன். ஓடுகிற படங்களில், பெரிய படங்களில் நடித்தால் தான் என்னை போன்ற நடிகர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி இருக்கிறார் வையாபுரி.

சற்று முன்