- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுக்கு வந்தது அடுத்த சிக்கல் - இசையமைப்பாளரை தொடர்ந்து தயாரிப்பாளரால் வந்தது அடுத்த நெருக்கடி

சிவகார்த்திகேயனுக்கு வந்தது அடுத்த சிக்கல் – இசையமைப்பாளரை தொடர்ந்து தயாரிப்பாளரால் வந்தது அடுத்த நெருக்கடி

- Advertisement -

தமிழ் சினிமாவில், குறுகிய காலத்தில் ரசிகர்களின் பார்வை வெளிச்சத்தில் பளீரென முன்னுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமா இன்ஸ்டஸ்ட்ரியில் மிக நல்ல பண்பான மனிதர் என பெயரெடுத்தவர். நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

அவரது ஒரு சில படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் பேசப்படாத நிலையில், சில மாதங்களுக்கு முன் வந்த மாவீரன் படம் வெற்றியடைந்தது. இப்போது இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய அயலான் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே, இசையமைப்பாளர் டி. இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, துரோகம் செய்துவிட்டதாக கூறியது, தமிழ் சினிமாவில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயனா இப்படி என, பலரும் அதிர்ச்சியுடன் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர். ஆனால், இமான் குறித்த புகாருக்கு, இதுவரை எந்த பதிலும் தராமல் சிவகார்த்திகேயன் இருந்து வருவதும் பலருக்கும் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்போது மற்றொரு விவகாரம், சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, வரும் பொங்கல் பண்டிகைக்கு அயலான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படத்தை திரையிட ரூ. 50 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டுள்ளது. இப்போது, இந்த ரூ.50 கோடி வியாபாரத்துக்கும் புதிய சிக்கல் உருவாகி விட்டது.

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு அயலான், லால் சலாம் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் என முதலிலேயே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில், மெயின் ஹீரோக்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் என்ற நிலையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகள் மட்டுமே வருவதால், இது அயலான் படத்தை பெரியதாக பாதிக்காது என, சிவகார்த்திகேயன் நினைத்திருந்தார்.

பாலா இயக்கிய வணங்கான் படமும், பாலா படங்களை ரசிக்கும் ஒரு தரப்பினர் மட்டுமே செல்வார்கள் என்பதால், அயலான் வசூலை பாதிக்காது எனவும் அவர் தரப்பில் கருத்து இருந்த நிலையில், இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர். மிஸ்டர் லோக்கல் படத்தின் போது, படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் பிரச்னை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றனர். எனவே, அயலான் படத்தின் 50 கோடி ரூபாய் பிஸினஸ்சை பாதிக்கும் விதமாக, தங்கலானை பொங்கல் அன்று களத்தில் இறக்குகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

- Advertisement -

சற்று முன்