- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவில் துள்ளலான ரெட்ரோ பாடல்களை வைத்த லோகேஷ் கனகராஜ்... கரு.. கரு... கருப்பாயி பாடலை வைரலாக்கும்...

லியோவில் துள்ளலான ரெட்ரோ பாடல்களை வைத்த லோகேஷ் கனகராஜ்… கரு.. கரு… கருப்பாயி பாடலை வைரலாக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த லியோ திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி விட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு திரையரங்குகளிலும் விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கட் அவுட், பாலாபிஷேகம், மேளதாளம் என அதிகாலை முதலே ரசிகர்கள் தெறிக்க விட்டனர். தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகாவிலும் லியோ கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு அதிகாலை 4 மணிக்கே படம் திரையிடப்பட்டதால், ரசிகர்கள் இரவிலேயே கூடினர்.

- Advertisement -

வெளிநாடுகளிலும் லியோ அதிக திரையரங்குகளில் வெளியானது. படத்தை பொறுத்தமட்டில், நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. முதல் பாதி மிக அருமையாக உள்ளதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

வழக்கமான லோகேஷ் கனகராஜ் படம் இது இல்லை என்ற பேச்சுகளும் எழ ஆரம்பித்துள்ளன. விமர்சனத்தை தாண்டி விஜயின் நடிப்பு தனித்துவமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனிடையே எப்போதும் போல இந்த படத்திலும் ரெட்ரோ பாடல்களை லோகேஷ் வைத்திருப்பது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

- Advertisement -

பரபரப்பாக காட்சிகள் ஓடி கொண்டிருக்க, தனி ட்ராக்கில் பாடல்களை ஓடவிட்டு ரசிப்பது லோகேஷ் கனகராஜின் ஸ்டைல். கைதியில் இதனை தொடங்கிய அவர், ஆசை அதிகம் வச்சி பாடலை ஓடவிட்டார். இது ஆடியன்ஸ்களிடம் சரியாக போய் சேர்ந்ததால் விக்ரம் படத்தில் இரண்டு இடங்களில் ரெட்ரோ பாடல்களை வைத்தார். தற்போது லியோ படத்திலும் இது தொடர்ந்துள்ளது.

முதல் பாதியில் அட்டகாசமாக இருக்கும் ஒரு சண்டை காட்சியில்தான் லோகேஷ் இதனை வைத்துள்ளார். கரு கரு கருப்பாயி பாடல், தாமரை பூவுக்கும் என இரண்டு பாடல்கள் இது ஒலிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிளைமேக்ஸில் நான் பொல்லாதவன் பாடலும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த பாடல்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்