- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை என்னால செய்ய முடியலேன்னு பீல் பண்றேன், நீங்களாவது அடிக்கடி செஞ்சு சந்தோஷமா இருங்க...

இதை என்னால செய்ய முடியலேன்னு பீல் பண்றேன், நீங்களாவது அடிக்கடி செஞ்சு சந்தோஷமா இருங்க – ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா சொன்ன அட்வைஸ்

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா, கீதாகோவிந்தம் படம் மூலம், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே ஒரு அற்புதமான நடிப்பு திறமையை அவர் வெளிப்படுத்தினார். அடுத்ததாக புஷ்பா, அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. சகல தரப்பு ரசிகர்களுக்கும் அவரைப் பிடித்துப் போனது.

கன்னடத்தில் அறிமுகமான அவர், தெலுங்கு சினிமாவில் நல்ல இடத்தை பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தன. அல்லு அர்ஜூனா, விஜய் தேவகொண்டா ரெட்டியுடன் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், மற்ற மொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.

- Advertisement -

தமிழில், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால், மற்ற தமிழ் படங்களில் ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகவில்லை. ஆனால் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளை தொடர்ந்து அடுத்து, இந்தியிலும் வாய்ப்புகள் வந்தன.

இந்தியில் மிஷன்மஜ்னு படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து, ரன்வீர் கபூர் உடன் அனிமல் என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே, நல்ல முறையில் பாலிவுட்டில் ஒரு நல்ல இடத்தை ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றுத் தந்திருக்கிறது. அடுத்தடுத்த இந்தி பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன.

- Advertisement -

அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் உடன் பல காட்சிகளில், ராஷ்மிகா மந்தனா உதட்டு முத்தக்காட்சிகளில் நடித்திருக்கிறார். இது பாலிவுட் படங்களில் சகஜம் என்றாலும், தமன்னாவை போல எதிர்காலத்தில் இவரும் கவர்ச்சி நாயகியாக மாறிவிடுவாரோ என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கதைக்கு தேவை என்றால், எப்படிப்பட்ட காட்சியிலும் நடிப்பேன் என, முத்தக்காட்சி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதில் தந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எனக்கு பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும். ஆனால், நேரமின்மையால், அப்படி பயணம் செய்ய முடியாமல் மிஸ் செய்கிறேன். நீங்களாவது அடிக்கடி வெளியூர்களுக்கு, நண்பர்கள் வீடுகளுக்கு என பயணம் செல்லுங்கள். பயணம், மிக வித்யாசமான ஒரு அனுபவம். உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை என பயணங்களில் மிக வித்யாசமான அனுபவங்களை பெற முடியும் எனக் கூறி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

- Advertisement -

சற்று முன்