கடந்த சனிக்கிழமை அன்று, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில், கார்த்தி 25 என்ற சிறப்பு விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் கார்த்தி நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில், 25 வது படமாக ஜப்பான் படம் வெளிவர இருக்கிறது. இதையடுத்து, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழாவை பொருத்தவரை 5 ஆயிரம் பேர் வரை கலந்துக்கொண்டு உள்ளனர். இதில், வெளியூர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 2,500 பேர் வரை இவ்விழாவில் வந்து கலந்துக்கொண்டனர். இதில் அதிகளவில் சூர்யா ரசிகர்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.
விழாவை பொருத்த வரை, நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மிகவும் தன்மையாக நடந்துக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் எந்தவிதமான ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாமல் நாகரிகமாக நடந்துக்கொண்டு உள்ளனர். தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழா போல் கார்த்தி 25 சிறப்பாக, அமைதியாக நடந்திருக்கிறது.
ரசிகர்களுக்கு சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு அரங்குக்குள் வந்த போது சிநேக்ஸ், ப்ரூட்ஸ், வாட்டர் பாட்டல் தரப்பட்டுள்ளது. இரவு 8.30 மணியளவில் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டு, எவ்வித குறையும் இல்லாமல் ரசிகர்களை சூர்யா, கார்த்தி தரப்பு கவனித்துக்கொண்டுள்ளனர். எந்தவிதமான கூச்சலோ, குழப்பமோ இன்றி உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், விழாவை மேடையில் இருந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா தர்ஷினி என்கிற டிடி செய்த மேதாவித்தனத்தால், கார்த்தி பயங்கர அப்செட் ஆகி இருக்கிறார். வழக்கமாக சூர்யா போன்ற பெரிய நடிகர்களை நிகழ்ச்சியின் நிறைவில் அழைத்து பேச வைப்பதுதான் வழக்கம். ரஜினி, கமல், விஜய் என அனைவருக்குமே இதுதான் பொருந்தும். ஏனெனில் அவர்களது பேச்சை கேட்கவே, ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பர். எவ்வளவு நேரமானாலும் இருந்து கேட்டு விட்டுச் செல்வர்.
ஆனால் கார்த்தி 25 விழாவில், நிகழ்ச்சியின் பாதியிலேயே டிடி, நடிகர் சூர்யாவை மேடையில் அழைத்து பேச வைத்திருக்கிறார். அவர் பேசிய பிறகு, கூட்டமே கலைந்து போய்விட்டது. இறுதியில் கார்த்தி பேசும்போது அவரது ரசிகர்கள் சொற்ப அளவில் மட்டுமே அரங்கில் இருந்திருக்கின்றனர். இசை வெளியீடு விழா என்பதால், ஜப்பான் படக்குழுவினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், கார்த்தி பயங்கர அப்செட்டில் இருந்திருக்கிறார். டிடி செய்த சொதப்பலால், எல்லாம் சரியாக இருந்தும் கடைசியில் விழா நாயகன் கார்த்தி, அதிருப்தியடையச் செய்துவிட்டார் டிடி.





