- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கதை எல்லாம் இங்க சொல்லக் கூடாது, கம்பி கட்டிய லியோ பட டைரக்டருக்கு...

இந்த கதை எல்லாம் இங்க சொல்லக் கூடாது, கம்பி கட்டிய லியோ பட டைரக்டருக்கு அன்றே பாடம் நடத்திய டைரக்டர் வெற்றிமாறன் – செம வைரலாகும் பழைய வீடியோ

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுகிறார். அவரது படங்கள், அவரது பெயரை போலவே நிச்சயம் வெற்றிப் படங்களாக அமையும் என்று, தமிழ் சினிமா உலகம் பாராட்டி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில், வெற்றிமாறனின் படங்கள் நிச்சயம் வெற்றிப் பெற்ற படங்களாகவே இருக்கின்றன.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை என வெற்றிமாறனின் படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள்தான். இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். ஆனால், விடுதலை 2ம் பாகம் இழுத்துக்கொண்டே போகிறது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான லியோ படம், ரூ. 500 கோடி வரை வசூலில் அசுர சாதனை புரிந்த படமாக இருந்தாலும், விமர்சன ரீதியாக இது தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை மிகவும் அதிருப்தியடையச் செய்துவிட்டது. இந்த காலத்தில் இப்படி ஒரு அபத்தமான பிளாஸ்பேக் காட்சியை புதுமுக இயக்குநர் கூட வைக்க மாட்டார். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படி எல்லாம் சொதப்பலான காட்சிகளை பார்த்து ரசிகர்கள் நொந்து போய்விட்டனர்.

இதற்கிடையே, படத்தில் மன்சூர் அலிகான் கூறும் பிளாஸ்பேக் உண்மை இல்லை. இன்னும் பார்த்திபனாக நடித்துக்கொண்டு இருக்கும் லியோ தன்னைப் பற்றி சொன்னால்தான், அது உண்மையாக இருக்கும் என்று இப்போது லோகேஷ் கனகராஜ் கூறி வருகிறார். சொதப்பலான பிளாஸ்பேக்கை தந்துவிட்டு, கடும் விமர்சனம் வந்ததால் இப்போது லோகேஷ் கம்பி கட்டுவது, ரசிகர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.

- Advertisement -

இதற்கு பதில் அளிப்பது போல, பல ஆண்டுகளுக்கு முன் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற வெற்றிமாறன், பேசும் வீடியோ காட்சி தற்போது வைரலாகிறது. வெற்றிமாறன் அருகில் மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் அமர்ந்து இருக்கிறார்.

வெற்றிமாறன் அந்த வீடிேயாவில், ஒரு படம் வெளியான பிறகு, எனக்கு டைம் இல்லை, புரடியூசர் தேதி தரவில்லை, அந்த நடிகர் சரியாக ஒத்துழைக்கவில்லை. படம் நீளமாக இருந்ததால் வெட்டி விட்டோம் என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது. திரையில் என்ன படம் வந்திருக்கிறதோ, அதுதான் ரசிகர்களுக்கு கன்வே ஆகும். எதை படத்தில் வைக்க வேண்டும். எதை வைக்க கூடாது என ஒரு இயக்குநருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல இயக்குநருக்கும், மோசமான இயக்குநருக்கும் உள்ள வித்யாசம் என்று கூறி இருக்கிறார் வெற்றிமாறன்.

- Advertisement -

சற்று முன்