- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் தனது 70வது படத்தில் நடிப்பது உறுதி, அந்த படத்தின் இயக்குனர் அவர்தான், கோலிவுட்...

நடிகர் விஜய் தனது 70வது படத்தில் நடிப்பது உறுதி, அந்த படத்தின் இயக்குனர் அவர்தான், கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவும் தகவல் – அட தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் 2 ரோல்களில் நடித்துள்ளார். இதில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த், விவேக் நடித்துள்ளனர். கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.

இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன். சுதீப், வைபவ், அஜ்மல், கஞ்சா கருப்பு, சினேகா, லைலா, ரம்யாகிருஷ்ணன், மீனாட்சி சவுத்ரி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, நடிகர் விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். இவர் தீரன் அதிகாரம் 1, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் படமாக இந்த படத்தை அவர் உருவாக்க உள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு மகளாக பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ நடிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்க பணிகளில் முழு தீவிரமாக ஈடுபடுவார் என்றும், வருகிற 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போகிறார் என்பதும் ஏற்கனவே விஜய் அறிவித்த தகவல்தான்.

- Advertisement -

தனது 69வது படத்தை முடித்து விட்டு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாாியாக, தொகுதி வாரியாக நடிகர் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து தனது கட்சி ஆதரவு திரட்டவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

ஆனால் இப்போது புதிய லேட்டஸ்ட் தகவலாக, நடிகர் விஜய் 70வது படத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தேர்தலுக்கு ஏறக்குறைய 2 ஆண்டுகள் இருப்பதால் அடுத்த 2025ம் ஆண்டில், தேர்தல் பணிகளுக்கு மத்தியில் 2 படங்களில் தாராளமாக நடித்து முடிக்கலாம் என்பதால், விஜய் 70 படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ்தான் இயக்குவார். அதுவும் அரசியல் கதைக்களம்தான் என்ற தகவல் சுடச்சுட வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்