சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் செய்யப்பட உள்ள படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய இந்த படம், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவரது முந்தைய படம், டைம் டிராவலிங் மெஷின் கருவை அடிப்படையாக கொண்டிருந்தது.
இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் பிரமாண்டம் குறைந்து விடக்கூடாது. கதைக்கேற்ப படத்தின் காட்சிகள் இருந்தால் மட்டுமே, அதன் வீச்சு முழுமையாக ரசிகர்களை சென்றடையும் என்பதால், சம்பளமே வாங்காமல் நடித்ததாக, அயலான் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட இந்த படம், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்த கருத்தால், சர்ச்சை நீடிக்கிறது. இந்நிலையில் அயலான் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனெனில், சினிமாவில் மார்க்கெட்டும் மதிப்பும் இருக்கும் வரை மட்டுமே, தனது அபிமான நடிகர்களுக்கு முழுமையான ஆதரவவை தருவார்கள். அவர்கள் மீது தவறான ஒரு இமேஜ் உருவாகி விட்டால், ரசிகர்களின் மனதில் உள்ள நடிகர் மீதான இமேஜ் பிம்பம் உடைந்துவிடும் என்பதே உண்மை.
இதற்கிடையே அயலான் படத்தில் வரும் ஏலியன், தமிழில் பேசுகிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் என்றாலும், தமிழ் படத்தில் தமிழில்தான் பேச வேண்டும் என்பதை தவிர்க்க முடியாது. அதனால், ஏலியனுக்கு பின்னணி குரல், டப்பிங் வாய்ஸ் யார் தருவது என்ற டிஸ்கஷன் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கு பரிச்சயமான, பிடித்தமான குரலாக இருப்பதும் முக்கியம் என்றும் விவாதிக்கப்படுகிறது.
முதலில் நடிகர் சந்தானம், வடிவேலு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் படம் என்பதால், சந்தானம் ஒத்துக்கொள்ள மாட்டார். வடிவேலு குரல், முன்பு போல் இல்லை. சந்திரமுகி 2 படத்தில் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. விடிவி கணேஷ் அல்லது விஜய் சேதுபதி பெயர்கள் பரிந்துரையில் இருக்கின்றன. இதில், மாவீரன் படத்துக்கு விஜய் சேதுபதி பின்னணி பேசி இருந்தார். அதனால், அவர்தான் பேசுவார் என்பது இறுதி முடிவாக இருக்கலாம். துணை நடிகர், ஹீரோ, வில்லன், இப்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என விஜய் சேதுபதியின் சினிமா பயணம் இப்படி போகிறதே, என்கின்றனர் அவரது ரசிகர்கள்.





