- Advertisement -
தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் இசைஞானி இளையராஜாவின் அசைக்க முடியாத இசை ஆதிக்கம் இருந்த காலகட்டத்தில், அவருக்கு பின் பல இசையமைப்பாளர்கள் சினிமாவுக்குள் வந்தனர். அப்படி வந்த 28 இசையமைப்பாளர்களில் ஒருவராக வந்தவர் தான் தேவா. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தவர் தேனிசை தென்றல் தேவா மட்டும்தான். அதிலும் கிராமத்து பாடல்கள் போட்டால் இளையராஜா மாதிரியே இருக்கு, ஏஆர் ரகுமான் மாதிரியே இருக்கு என்று பலரும் தேவா இசையை கேலி செய்ததால் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று அவர் தேர்ந்தெடுத்தது தான் கானா பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





