- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் செய்த வேலையால், ரஜினி டென்சன் - குருவை மீறிய சிஷ்யனாக லாரன்ஸ் உண்மையில்...

ராகவா லாரன்ஸ் செய்த வேலையால், ரஜினி டென்சன் – குருவை மீறிய சிஷ்யனாக லாரன்ஸ் உண்மையில் அப்படி நடந்துக்கிட்டாரா?

- Advertisement -

ரஜினிகாந்த் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் நடந்து முடிந்தது. 2ம் கட்ட படப்பிடிப்பு, மும்பையில் அமிதாப் பச்சன் பங்கேற்ற காட்சிகளாக நடந்தது. தீபாவளிக்கு பிறகு 3ம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இதற்கிடையே அடுத்த படமாக ரஜினி 171 படம் குறித்த தகவல்கள் அப்டேட் ஆகி வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வந்துள்ளது. வரும் 2024ம் ஆண்டில் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்திலோ படப்பிடிப்பு துவங்க உள்ளது.

- Advertisement -

ராகவா லாரன்ஸ், நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்ற அமர்க்களம் பாடல் காட்சியில் நடனமாடி, ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின், பார்த்தேன், ரசித்தேன் படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் நடித்தார்.

தொடர்ந்து முனி, காஞ்சனா படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ராகவா லாரன்ஸ், பேய் படங்கள் என்றாலே அது அவரது படம்தான் என்கிற அளவுக்கு காஞ்சனா 2, 3, 4 என தொடர்ந்து ரசிகர்களை பயமுறுத்தி வருகிறார். இயக்குநர் சுந்தர் சிக்கு போட்டியாக, பேய் படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்தாலும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் மாஸ் காட்டும் கேரக்டர்களில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் ரஜினி 171 படத்தில், ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக, கடந்த வாரமே தகவல் வெளியானது. இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் செய்த ஒரு செயலால், ரஜினி பயங்கர கோபத்தில் இருப்பதாகவும், இந்த படத்தில் ராகவா நடிக்க வேண்டாம் என ரஜினியே கூறும் அளவுக்கு நிலமை கைமீறி போய்விட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, ரஜினியே தனது குரு, அவரது சிஷ்யன், அவரது படத்தில் ஒரு காட்சியில் அவருடன் நடித்தாலே எனக்கு பெருமை என கூறி வந்த ராகவா லாரன்ஸ், ரஜினி 171 படத்தில் நடிப்பதற்காக, அந்த படத்தின் தயாரிப்பாளரை நேரடியாக அணுகி, தனது சம்பளம் இதுதான், இந்த சம்பளத்தை எனக்கு தர வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என கட் அண்ட் ரைட்டாக பேசி இருக்கிறார். இதை அறிந்த ரஜினிகாந்த், நான் நடிக்கிற படத்தில், ராகவா லாரன்ஸ்க்கு முக்கியத்துவம் தருகிற கேரக்டரில் நடிக்க சம்மதித்துள்ள நிலையில், இப்படி சம்பள விஷயத்தில் அவர் நடந்துக்கொண்டு இருக்கிறாரே என, அதிர்ச்சியடைந்த ரஜினி, அவர் மீது கோபத்தில் இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்