லியோ படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். தாய்லாந்து நாட்டில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் 68 என தற்காலிக பெயர் வைத்திருக்கும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சிநேகா – மீனாட்சி சவுத்ரி என இரண்டு ஹீரோயின்களுடன் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிக்கிறார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ, வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களை இந்த படம் திருப்திபடுத்தவில்லை என்பதே உண்மை. அதை விஜயும் புரிந்துக் கொண்டு விட்டார். எனினும், வசூல் ரீதியான வெற்றி, அதை மறைத்துவிட்டதாகவே தெரிகிறது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடப்பதாக இருந்தது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் அது நடக்கவில்லை. அதை ஈடுகட்டவும், ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கவும் லியோ வெற்றி விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட பிறகு, அடுத்த நாள் தாய்லாந்து நாட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.
லியோ படம் வெற்றி விழாவில், ரசிகர்களை திருப்திபடுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மட்டுமே விஜய் பேசினார். படத்தில் பணியாற்றியவர்கள், படத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களை மேடையேற்றி கவுரவிக்க, விஜய் மறந்து விட்டார் என ஒரு விமர்சனமும், வருத்தமும் படக்குழுவினரிடையே பரவியுள்ளது.
இது விஜயின் கவனத்துக்கும் சென்றுள்ளது. விஜய் 68 படப்பிடிப்பில் அவர் பிஸியாக இப்போது நடித்துக்கொண்டு இருப்பதால் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு படக்குழுவினருக்கு ஒரு பார்ட்டி நடத்தி விடலாம் என லியோ தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்டோர் விஜயிடம் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த விஜய், லியோ படக்குழு சார்ந்த அனைவருக்கும் என் சொந்த செலவில், வெற்றி விழா நடத்த வேண்டும். அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தும் விதமாக அந்த சக்சஸ் மீட்டில் எல்லாம் இருக்க வேண்டும். விமான போக்குவரத்து செலவு உள்பட எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அனைவரையும் தாய்லாந்து நாட்டுக்கே அழைத்து வாருங்கள், என ஸ்ட்ரிக்ட்டாக கூறி இருக்கிறார் விஜய்.





