- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள், வெடி சத்தத்தில் வெலவெலத்துப் போன தியேட்டர் நிர்வாகம் -...

சினிமா தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள், வெடி சத்தத்தில் வெலவெலத்துப் போன தியேட்டர் நிர்வாகம் – இவர் நடித்த படம் என்றாலே சர்ச்சைதானோ…

- Advertisement -

சினிமாவை போலவே, நிஜ வாழ்விலும் முரண்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும் இதுபோன்ற அதிரடி விஷயங்களை நிஜத்தில் பார்க்கும்போது இது எப்பேர்ப்பட்ட விபரீதமான சம்பவம் என்று மனம் பதைபதைக்கவே செய்கிறது.

சினிமாவில் அதிரடி சண்டை காட்சிகளும், அதிசயிக்க வைக்கும் பல சாக காட்சிகளும் இடம்பெறும். அதில் 90 சதவீதம் விஎப்எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ரசிகர்களின் கண்களை கட்டி காட்டும் மாய வித்தை, ஜித்து வேலை என்று கூட சொல்லலாம். அதனால் சினிமா தொழில்நுட்பத்தில், பல விஷயங்களில் ஜாலங்களை காட்டுகின்றனர்.

- Advertisement -

ஆனால் சினிமாவுக்கும் நிஜ வாழ்வுக்கும் உள்ள யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு ரசிகர்களின் மனநலம் மிகவும் பின்தங்கி விட்டது. அதன் வெளிப்பாடாக தான், விஜய் நடித்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியிட்ட போது, ரோகிணி தியேட்டருக்குள் இருக்கைகளை அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்பபடுத்தினர்.

சினிமா தியேட்டர் என்பது, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு பொழுதுபோக்கு இடம். மன மகிழ்ச்சிக்காக, மன ஆறுதலுக்காக, வழக்கமான பணிகளை தவிர்த்து, மனதின் ஓய்வுக்காக படம் பார்க்க வருபவர்கள் பலரும் உள்ளனர். ஒரு படம், இசை, அதில் வரும் காட்சிகள் அவர்களுக்குள் ஒரு மாறுதலை ஏற்படுத்தும். மனதை ரிலாக்ஸ் செய்யும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை ரிலிஸ் படங்களாக தமிழ்நாட்டில் ஜப்பான், ஜிகர்தண்டா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. அதே போல், இந்தியில் பாலிவுட் ஸ்டார்களில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் நடித்த டைகர் 3 என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம், வடமாநிலத்தில் உள்ள பல தியேட்டர்களில் தீபாவளி ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

வடமாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் டைகர் 3 படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போது, தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் மூன்று நான்கு இடங்களில், சில ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளனர். அதில் தொடர்ந்து 10, 20 முறை வெடிக்கும் சாட் வெடிகளும் வைக்கப்பட்டு, தீப்பொறிகளுடன் பட்டாசுகள் ஆக்ரோசமாக வெடிக்கின்றன. தியேட்டருக்குள் உள்ள ரசிகர்கள் அதிர்ச்சியில் மிரண்டு அலறி சிதறி ஓடுகின்றனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்