நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகளும் ஏராளம். நடிப்பில் பல உச்சங்களை தொட்ட அவரை உலகநாயகன் என்றுதான் ரசிகர்கள் அழைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் தனது 69வது பிறந்த நாளை கமல் கொண்டாடினார்.
கமல்ஹாசனின் 2வது மனைவிக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன். வயது 30 களை கடந்த நிலையில், இன்னும் இருவருமே திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஒரு ஐடியா இருப்பதாகவே தந்தை கமல்ஹாசனிடம் இருப்பதாக தெரியவில்லை.
சினிமாவில் நிறைய சாதித்த கமல்ஹாசன், நிஜ வாழ்க்கையில் குறிப்பாக திருமண வாழ்க்கையில் பல கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர். நடிகைகள் ஸ்ரீ வித்யா, சிம்ரன், சமீபத்திய பூஜாகுமார் வரை பல பெண்களுடன் உறவு வைத்திருந்தவர் என்று கூறப்படுகிறது. கவுதமியுடன் 17 ஆண்டுகள் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்தியவர்.
வாணி, சரிகா என இரண்டு பெண்களுக்கு தாலிகட்டி மனைவியாக்கி குடும்பம் நடத்திய இவர், குடும்ப வாழ்க்கையில் எப்போதும் தரம் இல்லாத ஒரு வாழ்க்கை பின்னணியை கொண்டவராக விமர்சிக்கப்படுகிறார். இப்போது தந்தை வழியை பின்பற்றி அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் தாலி கட்டாத மனைவியாக, தன் காதலருடன் ஆண்டுக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்.
மும்பையில் தனியாக வசிக்கும் ஸ்ருதிஹாசனுடன், அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, தீபாவளி வாழ்த்துகளை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். சாந்தனு ஹசாரிகா பட்டு வேட்டி சட்டையில், ஸ்ருதிஹாசன் பட்டுப்புடவையில் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்தால், தலை தீபாவளி கொண்டாடும் மண மக்களை போல தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
காதலர் சாந்தனுவை நெருக்கமாக ஸ்ருதிஹாசன் கட்டியணைத்து நின்றும், கன்னத்தில் முத்தமிட்டும் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அப்பா, இப்படி தான் மன்மத லீலைகளை செய்து வந்தார். தாலி கட்டாமலேயே கவுதமியுடன் குடும்பம் நடத்தினார். அதை அப்படியே பின்பற்றும் ஸ்ருதிஹாசன், தன் காதலனை மும்பை வீட்டில் ஆண்டுக்கணக்கில் தன்னுடன் தங்க வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ விருப்பமே இல்லாத ஒரு தகப்பனாக கமல் இருந்து வருவதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





