- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் சொதப்பும் உதவி இயக்குநர்கள், லோகேஷ் கனகராஜ் அவங்களுக்கு இப்படிதான் பனிஷ்மென்ட் தருவாராம் -...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சொதப்பும் உதவி இயக்குநர்கள், லோகேஷ் கனகராஜ் அவங்களுக்கு இப்படிதான் பனிஷ்மென்ட் தருவாராம் – இது வித்யாசமான தண்டனையா இருக்கே?

- Advertisement -

ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தில் நடித்த கதாநாயகனை, படத்தில் இயக்குநரை, இசையமைப்பாளரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த உதவி இயக்குநர்களை சுலபமாக மறந்து விடுகின்றனர்.

அதே வேளையில், படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநர்கள் தான் அந்தந்த காட்சிகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று மிஸ் ஆனாலும் கூட படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஆகிவிடும்.

- Advertisement -

தொடர்ந்து ஷூட்டிங், இரவு பகலாக நீடிக்கும்போது உதவி இயக்குநர்கள் சோர்ந்து போவதுண்டு. அல்லது அவர்களுக்கான தனிப்பட்ட பிரச்னைகளாலும் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் தவறு செய்துவிட்டால், இயக்குநர் சொல்லிய பணிகளில் குறைபாடு இருந்தால், கண்டபடி திட்டுவது பல இயக்குநர்களின் வாடிக்கை.

குறிப்பாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், இயக்குநர் சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் இடம், பொருள், ஏவல் எதுவும் பார்க்காமல் உதவி இயக்குநர்களை பலபேர் முன்னிலையில் கடுமையான வார்த்தைகளால் திட்டி விடுவார்களாம். சில இயக்குநர்கள், சரியாக நடிக்காத பெரிய நடிகர், நடிகைகளை கூட நேரடியாக திட்ட முடியாமல், உதவி இயக்குநர்களை சாடைமாடையாக திட்டி வேலை வாங்குவதும் வழக்கம்தானாம்.

- Advertisement -

இப்படி அவமானம் ஏற்படும் போது, மனம் நொந்துவிடும் சில உதவி இயக்குநர்கள், இந்த வேலையே வேண்டாம் என உதறிவிட்டுச் செல்வதும் உண்டு. அதுபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் 15 முதல் 20 பேர் வரை உதவி இயக்குநர்கள் இருக்கின்றனர். ஆனால், தவறு செய்யும் உதவி இயக்குநர்களை இவர் கண்டிக்கும் விதமே வேற லெவல்தான்.

அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது சொதப்பி விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ அவர்களை எதுவுமே அந்த நேரத்தில் சொல்லாமல், அப்படியே அமைதியாக இருந்து விடுவார். அன்று படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரவில் அறையில் இருக்கும்போது அந்த உதவி இயக்குநரை தனியாக அழைத்து, தவறை சுட்டிக்காட்டி, அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்புவதுதான் அவரது வழக்கம். உண்மையிலேயே நீங்க வேற லெவல்தான் ப்ரோ.

- Advertisement -

சற்று முன்