- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது, இதை சொன்னது யார் தெரியுமா? -...

நடிகர் கமல்ஹாசன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது, இதை சொன்னது யார் தெரியுமா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் உச்ச நடிகர் கமல்ஹாசன். டான்ஸ் மாஸ்டர் கனவுடன் வந்த கமலை நடிகராக மாற்றியது இயக்குனர் கே பாலசந்தர்தான். இதுபற்றி ஒரு நேர்காணலில் பங்கேற்ற கமல்ஹாசன் கூறியதாவது, ஒருமுறை கே பாலசந்தர் சார் என்னிடம், லைப்ல அடுத்து என்னடா பண்ணப் போறே, என்று கேட்டார். உங்களை மாதிரி நான் டைரக்டர் ஆகப் போறேன் சார் என்றேன். போடா பைத்தியக்காரா, பித்துக்குளி என்று திட்டினார்.

நீ நல்ல டெக்னீஷியன். அது எப்ப வேணா ஆயிடலாம். ஆல்ரெடி நீ அசிஸ்டென்ட் டைரக்டர், டான்ஸ் அஸிஸ்டெண்ட், டான்ஸ் பண்றே, டைரக்டர் ஆகறதெல்லாம் பெரிய விஷயமே இல்லே. அதெல்லாம் ஆயிடலாம். நான் உனக்கு வெச்சிருக்கிற திட்டம் எல்லாருக்கும் வாய்க்காது.

- Advertisement -

முதலில் சொந்தமாக வீடு கட்டு, எப்பவும் ஆட்டோ ரிக்‌ஷாவுல வர அலையாதே என்று சொன்னார். வாழ்வு கொடுத்தவர் சொல்றாரே, என கொஞ்ச நாள் டைரக்டர் ஆகும் திட்டத்தை தள்ளிப் போட்டேன். கடைசியில் அவர் சொன்ன மாதிரியே வீடு கட்டிய பிறகுதான், என் முதல் படத்தை டைரக்ட் செய்தேன்.

ஆனால் நண்பர் ஆர் சி சக்தி, நீ என்னடா அந்த ஆளு சொன்னாருன்னு நடிச்சிட்டே இருக்கே, டைரக்ட் பண்ணு, டைரக்ட் பண்ணுன்னு சொல்லிட்டே இருப்பார். ஆனா நான் பிராமிஸ் பண்ணிய மாதிரியே வீடு கட்டிய பிறகுதான் டைரக்ட் செய்தேன். அதுதான் நடந்தது.

- Advertisement -

அந்த நடிகர் அதாவது கமல்ஹாசன் மீது அந்த விஷயத்தில் எனக்கு ரொம்ப நன்றி உண்டு. ஆனால் நடிகர் கமல்ஹாசன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது. அதனால் அவருக்காக பாதியிலேயே நான் எழுத ஆரம்பிச்சுட்டேன். இல்லேன்னா கேரியரையே நாசமாக்கிடுவாருன்னு தெரியும்.

சகலகலா வல்லவன் மாதிரி 50 படங்கள் நடிக்க சொல்வாங்க. இவரும் காசுக்கு ஆசைப்பட்டு நடிச்சிடுவார். குதிரை லகான் மாதிரி, நடிகர் கமலை கண்ட்ரோல் பண்ண நான் எழுத ஆரம்பிச்சேன். டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அது ஆசை இல்லை. அதுதான் அவருக்கு பாதுகாப்பு என்று எனக்கு தெரியும் என்று கமல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்