- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழைத் தொடர்ந்து மலையாளக் கரையோரம் செல்லும் நடிப்பு அரக்கன் - இவருக்குதான் வில்லனாம் - சம்பளம்...

தமிழைத் தொடர்ந்து மலையாளக் கரையோரம் செல்லும் நடிப்பு அரக்கன் – இவருக்குதான் வில்லனாம் – சம்பளம் கூட முன்னபின்ன இருந்தாலும் ஓகேவாம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநராக வந்து நடிகரானவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக மணிவண்ணன், சேரன், சுந்தர் சி, மிஷ்கின், கவுதம் மேனன், தருண்கோபி, பாரதிராஜா, பாக்யராஜ், அமீர், மகேந்திரன், பிரதீப் ரங்கநாதன் என பலரை சொல்லலாம்.

ஒரு இயக்குநராக, தனது படத்தில் இடம்பெற்ற அந்த காட்சிக்கான நடிப்பை ஒரு இயக்குநரால் வாங்க தெரிய வேண்டும். அப்படி என்றால், அவர்கள் நடித்துக் காட்டிதான் நடிகர்களுக்கு தெரியப்படுத்த முடியும். அதனால் இயக்குநர்கள் நடிகராவது மிக சுலபமான விஷயம்தான். பாரதிராஜா நடித்து காட்டுவதில் 10 சதவீதம் நடித்தாலே போதும் என்பார்கள்.

- Advertisement -

அந்த வகையில் அஜீத்குமாருக்கு வாலி படம் மூலமும், விஜய்க்கு குஷி படம் மூலமும் கம்பேக் கொடுத்தவர்தான் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாய் வலம்வந்து கொண்டு இருக்கிறார். மாநாடு படம் மூலம் தலைவரே, தலைவரே என வசனம் பேசி, மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா இன்று அசத்தி கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வௌிவந்த மார்க் ஆண்டனி படத்தில், மிக அட்டகாசமான ஒரு வில்லத்தனமாக நடிப்பை தந்து அந்த படத்தின் வெற்றிக்கே பெரிய காரணமாக இருந்தவர் எஸ்ஜே சூர்யாதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த கேரக்டரில் அவரை தவிர வேறு யாராலும் அந்த சிறப்பான நடிப்பை தந்திருக்க முடியாது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து இப்போது வந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும், ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்துக் கொண்டு அதகளம் செய்திருக்கிறார் எஸ்ஜே சூர்யா. இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த், இன்றைய நடிகவேள் எஸ்ஜே சூர்யா தான் என எம்ஆர் ராதாவுடன் ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய மகிழ்ச்சியை அவருக்கு தந்திருக்கிறது.

இந்நிலையில், மலையாள படவுலகில் இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அங்குள்ள முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ்கோபியின் 251 படத்தில், வில்லனாக நடிக்க அழைத்துள்ளனர். மலையாளத்தில் தடம்பதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், சம்பளம் பற்றி கூட கவலையில்லை, நடிக்கிறேன் என ஒத்துக்கொண்டு இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. மலையாளத்தில் நல்ல கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. நல்ல நடிகர்களுக்கு கரும்பு தின்ன கூலியா என்பது போல, அங்கும் தன் திறமையை வெளிப்படுத்தி அசத்துவார் எஸ்ஜே சூர்யா.

- Advertisement -

சற்று முன்