- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தபடத்தில் நடிக்க இரண்டு வாய்ப்புகளை மறுத்த கீர்த்தி சுரேஷ், நல்ல சான்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டேனே,...

அந்தபடத்தில் நடிக்க இரண்டு வாய்ப்புகளை மறுத்த கீர்த்தி சுரேஷ், நல்ல சான்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டேனே, இப்ப புலம்பி என்னம்மா பண்றது?

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அவரது அசத்தலான அழகும், திறமையான நடிப்பும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. தமிழில் ரஜினி முருகன், ரெமோ, சாமி 2, அண்ணாத்த, பைரவா, தொடரி, மாமன்னன், நடிகையர் திலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த நிலையில் அண்ணாத்த படத்தில், ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். சைரன், ரகுதாத்தா, கண்ணிவெடி ஆகிய படங்களில் இப்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

- Advertisement -

தமிழில் வெளிவந்த தெறி ரீமேக் இந்தி படத்தில், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தை தமிழில் அட்லி இயக்கினார். ஆனால், இந்தியில் இந்த படத்தை அட்லி தயாரிக்கிறார். இந்த படம், கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல அறிமுகத்தை, வரவேற்பை பாலிவுட்டில் ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அண்ணாத்த படம் 2021ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். இது சுமாரான வெற்றிப்படமாக தான் இருந்தது. ஆனால், இந்த படத்தில் நடித்த காலகட்டத்தில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், ரஜினிக்கு தங்கை என்ற கேரக்டரை இழக்க மனமின்றி, பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

- Advertisement -

அதே போல் ஷாம் சிங்கராய் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கவும் கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த படத்தையும் நிராகரித்துள்ளார். அந்த படத்தில், அந்த கேரக்டரில் சாய்பல்லவி நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படி 2 படங்களில் நடித்திருந்தால் இன்னும் பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் நிச்சயம் பேசப்பட்டு இருப்பார். ஆனால், ரஜினிக்கு தங்கை கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டு இந்த 2 படங்களையும் நிராகரித்து விட்டார்.

சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அபூர்வமாக தான் அமைகிறது. அந்த வகையில், ஜிகர்தண்டா படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை முதலில் இழந்த ராகவா லாரன்ஸ், இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து இழந்த வாய்ப்பை, அந்த பாராட்டை மீண்டும் பெற்றுவிட்டார். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த கீர்த்தி சுரேஷ், இனி அந்த வாய்ப்பை மீண்டும் பெறப்போவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்