- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை மீனாவின் கனவு பொய்த்துப் போனது, புகைப்படங்களுடன் காத்திருந்தும் அவர் ஆசை நிராசையானது - நம்ப...

நடிகை மீனாவின் கனவு பொய்த்துப் போனது, புகைப்படங்களுடன் காத்திருந்தும் அவர் ஆசை நிராசையானது – நம்ப வெச்சு இப்படியாப்பா ஏமாத்துவீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில், கடந்த 1990களில் நடிகை மீனா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அவர் நடித்த அனைத்து படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனால், வெற்றிப் பட நாயகியாக அவரை பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தனர்.

எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, தாய்மாமன், மாமன் மகள், ராஜகுமாரன், நாட்டாமை, கூலி, அவசர போலீஸ் 100, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என மீனா நடித்த பல படங்கள், வெள்ளி விழா படங்களாக இருந்தன. அதிலும் முத்து, நாட்டாமை, அவ்வை சண்முகி போன்ற படங்கள் மீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

- Advertisement -

ஆனால் கடந்த ஆண்டில் அவரது கணவர் இறந்த பிறகு மிகவும் வருத்தத்தில் இருந்த மீனா இப்போதுதான் மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். மலையாளத்தில் திரிஷியம் 3 படத்தில் இப்போது மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று இப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடும் இறுதி போட்டியில் இந்தியா 241 ரன்களை எடுத்துள்ள நிலையில், இரவு 9 மணி அளவில், ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 212 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகை மீனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. இந்த உலக கோப்பையை பாரீஸ்சில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது நான்தான். இப்போது ரொம்பவும் பக் பக் என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்தியா ஜெயிக்க வேண்டுமே என்ற பதட்டம் அதிகரிக்கிறது.

இந்தியா எப்படியும் வென்று விடும் என்ற நம்பிக்கையில், உலக கோப்பையை நான் அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி உலக கோப்பை வாங்கும் ஸ்டில்லையும் இணைத்து, நினைத்தது நடந்தது என்ற கேப்சனுடன் பதிவிட தயாராக இருக்கிறேன். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என, கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் வாழ்த்துகிறேன் என, கூறியிருக்கிறார் நடிகை மீனா. ஆனால், இறுதியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, மீனாவின் ஆசை பொய்த்துப் போனது.

- Advertisement -

சற்று முன்