- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுக்கும், அதுக்கும் இப்ப ஏப்பா முடிச்சு போடறீங்க? - மன்சூர் அலிகான் விஷயத்தில் நடிகர் விஜயை...

இதுக்கும், அதுக்கும் இப்ப ஏப்பா முடிச்சு போடறீங்க? – மன்சூர் அலிகான் விஷயத்தில் நடிகர் விஜயை கோர்த்து விட்ட புண்ணியவான்கள்

- Advertisement -

விஜய், திரிஷா நடித்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இதுகுறித்து மன்சூர் அலிகான் பேசுகையில், திரிஷா உடன் நடிக்கிறேன் என்பதால் பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன். காஷ்மீரில் திரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் மிக மோசமான மனிதர். அவர் மனித குலத்துக்கே அவமானம் என, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். அதே போல் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், நான் தப்பாக திரிஷா குறித்து பேசவில்லை. அந்த காலத்தில் வில்லன் நடிகர்களுக்கு, கதாநாயகிகளுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த வாய்ப்பு இல்லை என்பதை தான் காமெடியாக சொல்லி இருந்தேன். என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் யாரோ, இந்த விஷயத்தை கொம்பு சீவி விட்டுள்ளனர் என்று மன்சூர் அலிகான் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் விஜய், தன்னுடன் நடித்த ஒரு நடிகைக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, அதுவும் திரிஷா அவரது நீண்டகால நண்பராக இருந்தும் விஜய், கண்டனம் தெரிவிக்காதது ஏன் எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில், வாரிசு படம் ஷூட்டிங் நடந்த போது, ஷாம் ஒரு பேட்டியில் கூறியதை இப்போது ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அதாவது வாரிசு படத்தில் நடித்த ஷாம், விஜயுடன் நடித்த அனுபவங்களை அப்போது பகிர்ந்துள்ளார். அதில், 12பி படத்தில் நான் அறிமுகமானேன். அதை விஜயிடம் சொன்னேன். அப்போது, டேய் யாருடா நீ, முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகான்னு ரெண்டு குதிரைகளோட வர்றே?’ என ஜாலியாக கேட்டார் என கூறியிருந்தார்.

அப்போதே இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. விஜய் எப்படி இரண்டு நடிகைகளை குதிரை என விமர்சிக்கலாம் என கணடன குரல்களும் எழுந்தது. இப்போது மன்சூர் அலிகான், திரிஷா குறித்து தவறாக பேசிய நிலையில், ஷாம் சொன்ன விஜய் மேட்டரையும் இப்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, விஜய் பேசியது மட்டும் நியாயமா? என, கோர்த்துவிடும் பாணியில் சிலர் இந்த விவகாரத்தை இன்னும் பெரிதுபடுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்