- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த எடத்துல, நம்ம ஷூட்டிங் நடத்த வேண்டாம், திடீரென வேறு இடத்துக்கு படப்பிடிப்பை மாற்றச் சொன்ன...

அந்த எடத்துல, நம்ம ஷூட்டிங் நடத்த வேண்டாம், திடீரென வேறு இடத்துக்கு படப்பிடிப்பை மாற்றச் சொன்ன விஜய் – அந்த பயம் இருக்கட்டும் என கலாய்த்த ரசிகர்கள்

- Advertisement -

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 படப்பிடிப்பு அக்டோபர் 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மீனாட்சி சௌத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, மைக் மோகன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

பிரசாத் ஸ்டுடியோவில் பாடல் காட்சியுடன் இந்த படப்பிடிப்பு, அதற்கு பிறகு தாய்லாந்து, பாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள படக்குழு, சில நாட்கள் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்து, சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது.

- Advertisement -

ஆனால், படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவை அழைத்த நடிகர் விஜய், எதற்காக ஷூட்டிங் இடைவெளி விடுகிறீர்கள், டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். உடனடியாக படப்பிடிப்பு துவங்குங்கள் என ஸ்ட்ரிக்ட்டாக கூற, இப்போது 3ம் கட்ட விஜய் 68 படப்பிடிப்பு, பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இங்கு ஒருவாரம் நடக்கும் இந்த படப்பிடிப்பில் படத்தில் நடிக்கும் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட அனைவருமே பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டே செம ஜாலியாக இருக்கும். வெங்கட்பிரபு இயக்குநர் என்பதால், ஆர்ட்டிஸ்ட் கொண்டாட்டங்களுக்கு தடையாக இருக்க மாட்டார் என்பதும் அவர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

- Advertisement -

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில், ரயில் கம்பார்ட்மென்டில் விஜய் பங்கேற்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. திடீரென அந்த ரயில்வே கம்பார்ட்மென்ட் கோகுலம் ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டு, அங்கு விஜய் நடிக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் இடமாற்றத்துக்கு காரணம், நடிகர் ரஜினிதான்.

பிரசாத் ஸ்டுடியோவில் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 ஷூட்டிங் நடக்கிறது. ரஜினி பங்கேற்கும் காட்சிகளுக்காக, போலீஸ் ஆபிஸ் செட்டிங் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே காக்கா, கழுகு கதை பிரச்னை ஓடியதால், எதற்கு வீண் விவகாரம் என, ரஜினி ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு அருகில், என்னுடைய படத்தின் ஷூட்டிங் நடக்க வேண்டாம் என, விஜய் இந்த லோகேஷனை மாற்றச் சொன்னதாக தெரிய வந்துள்ளது. அந்த பயம் இருக்கட்டும் என,விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் டயலாக்கை சொல்லி, ரஜினி ரசிகர்கள் லாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்