- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய நாயகியை மறக்காத உலகநாயகன், 19 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கமலுடன் ஜோடி சேர்ந்த கதை...

பழைய நாயகியை மறக்காத உலகநாயகன், 19 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கமலுடன் ஜோடி சேர்ந்த கதை – அப்போ ஹீரோயின் அவங்க இல்லையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில், உலகநாயகன் கமல்ஹாசன் எப்போதும் நாயகிகளின் மனம் கவர்ந்த நாயகனாகவே இருக்கிறார். அவருடன் நடிப்பது என்றாலே, நடிகைகளுக்கு உள்ளூர சந்தோஷம்தான். ஏனெனில் உலகளாவிய ரசிகர்களை கொண்ட அவரது படத்தில் நடித்தால், விரைவில் பிரபலமாகி விடலாம்.

அதுமட்டுமின்றி கமல் படத்தில் நடிக்கும்போது நடிப்பு ரீதியான பல விஷயங்களை அவரிடம் இருந்துக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு சிறந்த திரைக் கலைஞனாக, மற்றவர்களுக்கு நிறைய கற்றுத் தருபவர் கமல்ஹாசன். அதனால், நடிகைகளாக வருபவர்கள் அவரிடம் இருந்த நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

நாயகன் படத்துக்கு பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார். 2024 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. எச். வினோத் இயக்கும் படத்தை அடுத்து, கமல் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தக்லைப் படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.

மணிரத்னம் – கமல்ஹாசன் இணையும் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. கமலுக்கு முதன்முறையாக இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இவருக்கு பெரிய சம்பளம் அதாவது ரூ. 12 கோடி ரூபாய் பேசப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தில் திரிஷா நடிப்பதும் உறுதியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் ஏற்கனவே நடித்துள்ள திரிஷா, அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மன்மதன் அம்பு படத்தில், ஏற்கனவே கமலுடன் திரிஷா நடித்திருக்கிறார். அந்த வகையில், கமலுடனும் நல்ல நட்பில் இருக்கிறார் திரிஷா.

இப்போது, இந்த படத்தில் 3வது நாயகியாக விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியும் நடிக்கிறார். அன்னலட்சுமி என்ற கேரக்டரில் கமலுடன் ஒரு பாடல் காட்சியில் மிக நெருக்கமாக நடித்திருப்பார் அபிராமி. அந்த பழைய பாசத்தில், நட்பில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அபிராமிக்கு கமல் வழங்கி இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இப்போது திரிஷா, அபிராமி உறுதியாக நடிப்பதால், இதில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்