- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ நட்சத்திரத்தை வெளியிட நிபந்தனை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்... செய்வாரா கௌதம் மேனன்...

துருவ நட்சத்திரத்தை வெளியிட நிபந்தனை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்… செய்வாரா கௌதம் மேனன்…

- Advertisement -

விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம், ஆரம்பமானதிலிருந்து இப்போது வரை பிரச்சனை நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்தப் படத்தை முதலில் சூர்யாவுக்காக எழுதியிருந்தார் கௌதம் மேனன். இதற்காக அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு சூட்டிங் செல்லும் நேரத்தில், திடீரென கூட்டணி பிரிந்தது.

இதன்பிறகு இந்த கதையை கொஞ்சம் வேறு முறையில் மாற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு கூறியிருக்கிறார் கௌதம் மேனன். இதற்கு சரி என்று ரஜினியும் ஒப்புக்கொள்ள, கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர் கபாலியில் பா ரஞ்சித்துடன் இணைந்தார். இதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திற்குள் வந்தார் விக்ரம்.

- Advertisement -

ஏற்கனவே அவர் நடிகரின் முந்தைய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்து இருந்த சூழலில், இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என பலரும் நம்பினார்கள். அதற்கு ஏற்றது போல விக்ரமின் தோற்றமும் படுமாஸாக இருந்தது. ஜான் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. விமானத்திலிருந்து விக்ரம் கோட் சூட் கூலிங் கிளாஸ் உடன் தரையிறங்கும் காட்சியை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க பொருளாதார பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் திரைப்படம் முடங்கியது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கௌதம் மேனனும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விக்ரமும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இப்படியான சூழலில் படத்தை மீண்டும் களம் இறக்க திட்டமிட்ட கௌதம் மேனன் அதற்கான பணிகளில் இறங்கினார்.

- Advertisement -

சாட்டிலைட் உரிமம் உட்பட மற்ற பிரச்சனைகளும் தீர்ந்து நவம்பர் 24ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. நாளை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க அதற்கான எந்த ஏற்பாடும் இன்னும் நடைபெறாமல் இருக்கிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்னும் படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் 40 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பவில்லை என்று மனுவில் கூறப்பட்டது.

பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என மனுதாரர் தரப்பு வலியுறுத்திய நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2 கோடி ரூபாயை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என கௌதம் மேனனுக்கு உத்தரவிட்டது. காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் கூறியது. இதனால் பணத்தை கௌதம் மேனன் கொடுத்துவிட்டு திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்