- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு வந்த புது நெருக்கடி, இந்த மாதம் இறுதி வரை சென்னையில்தான் கோட் படத்தின்...

நடிகர் விஜய்க்கு வந்த புது நெருக்கடி, இந்த மாதம் இறுதி வரை சென்னையில்தான் கோட் படத்தின் ஷூட்டிங் – ஆனால் அஜீத்குமார் ஈஸியா தப்பிச்சுட்டாரே…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற நீளமான ஆங்கிலப் பெயர் வைத்துள்ள இந்த படத்தின் சுருக்கம் கோட். இதை சிலர் ஆடு என குறிப்பிட்டு கிண்டல் செய்தும் வருகின்றனர்.

ஆனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதை பொருட்படுத்தவில்லை. எல்லா நேரமும் தலைசிறந்த ஒருவராக இந்த படத்தில் விஜய் கேரக்டர் இருப்பதால் அதுவே பொருத்தமாக இருக்கும் என விட்டுவிட்டனர். அதுமட்டுமின்றி அடுத்து அரசியல் பிரவேசம் செய்ய உள்ள விஜய்க்கு இந்த பெயரும் ஒரு விதத்தில் மக்கள் மத்தியில் புகழாரமாக தான் இருக்கிறது.

- Advertisement -

சென்னை, ஐதராபாத், துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் கோட் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் இலங்கையில் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்டது. இதற்காக லோகேஷன் பார்க்க இலங்கைக்கு சென்ற இயக்குநர் வெங்கட்பிரபுவும் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார்.

இந்நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம்தான் இலங்கையில் நடக்க உள்ளதாகவும், அதுவரை அதாவது இம்மாதம் 31ம் தேதி வரை சென்னையில்தான் கோட் படத்தின் ஷூட்டிங் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது.

- Advertisement -

இதனால் நடிகர் விஜய்க்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது வருகிற 6ம் தேதி, சென்னையில் கருணாநிதி 100 விழா, தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் திமுக தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

விஜய் அரசியலுக்கு வருவதே திமுக வை எதிர்த்துதான் என்ற நிலையில், இந்த விழாவில் விஜய் பங்கேற்பதை தவிர்க்கவே விரும்புவார். ஆனால் வருகிற 6ம் தேதி அவர் சென்னையில்தான் இருக்கிறார். அன்றைய படப்பிடிப்புகளும் ரத்து செய்யபப்ட்டுள்ளதால், அதை காரணமாகவும் சொல்ல முடியாது. அதனால் கருணாநிதி 100 விழாவில், உள்ளூரில் இருந்துக்கொண்டு விஜய் பங்கேற்காவிட்டால் அதுவே சர்ச்சையாகும். ஆனால் துபாயில் இருக்கும் அஜீத், இந்த விவகாரத்தில் இருந்து எளிதாக தப்பிவிட்டார். விஜய்க்கு இது புது சிக்கலாக வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்