தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் தொடர்ந்து விவாகரத்து செய்வது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது தனுஷ் ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ் குமார் சைந்தவி வரிசையில் ஜெயம் ரவி – ஆர்த்தி நட்சத்திர தம்பதியினரும் பிரிய உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி, தனது வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த அறிவிப்புக்கு பிறகு பல பிரச்சனைகள் எழுந்தது. குறிப்பாக இந்த விவாகரத்து குறித்து ஆர்த்தி தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியதால் ஜெயம் ரவி மீது பலரும் குற்றச்சாட்டு கூறினர். ஆனால் ஜெயம் ரவி, தனது பக்கமுள்ள உண்மைகளை வெளிப்படையாக பேசி வருகிறார்.
இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி கூறுகையில், இந்த விவாகரத்து குறித்து எதுவுமே எனக்குத் தெரியாது என ஆர்த்தி சொல்வதெல்லாம் பொய். இந்த முடிவு எடுத்த பிறகு நான் விவாகரத்து நோட்டீசை அவர்களுக்கு இரண்டு முறை அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்ட பிறகுதான் நான் சமூக வலைதளங்களில் அந்த விஷயத்தை பதிவிட்டேன்.
மேலும் நான் என் குழந்தைகளை தனியாக விட்டுச் சென்றதாக ஆர்த்தி கூறினார். என்னுடைய ஒரு மகன் பிறந்தநாள் அன்று நான் ஓட்டலில் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை தெரிந்து கொண்டு ஆர்த்தி என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இலங்கை சென்று விட்டார்.
எங்களுக்கு திருமணம் ஆகி இந்த 15 ஆண்டுகளாக எனக்கு என்று தனியாக வங்கியில் கணக்கு கிடையாது. நான் என்ன செலவு செய்தாலும், அதற்கு ஆர்த்தி கணக்கு கேட்பார். ஆனால் ஆர்த்தி தன் இஷ்டம் போல செலவு செய்வார். எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் இல்லாமல் போனதால்தான் நான் இந்த முடிவு எடுத்தேன், என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.





