இயக்குநர் விக்னேஷ் சிவன், நீண்ட நாட்களாக படங்களை இயக்க வாய்ப்பின்றி இருந்து வருகிறார். கடந்தாண்டில், நடிகர் அஜீத்குமாரின் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கதை பிடிக்கவில்லை என, அஜீத்குமார், விக்னேஷ் சிவனை கழட்டி விட்டுவிட, பயங்கர மன உளைச்சலில் தவித்தார். இப்போது அந்த படத்தை விடாமுயற்சி என்ற பெயரில் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
அதன்பிறகு யாருமே விக்னேஷ் சிவனுக்கு படங்களை இயக்கும் வாய்ப்பு தரவில்லை. இதற்கிடையே ஜெயிலர் போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதி தந்து ஒரு சினிமா கவிஞராக மாறிவிட்டார் விக்னேஷ் சிவன். அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா கமிட் ஆகி நடித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், ஒரு படம் கூட இயக்க வாய்ப்பின்றி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனம், விக்னேஷ் சிவன் இயக்கும் பட வாய்ப்பை தர முன்வந்தது. இந்த படத்தின் நாயனாக பிரதீப் ரங்கநாதன் என முடிவான நிலையில், படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என்றும், அதில் இயக்குநர் சம்பளம் ரூ. 10 கோடி, பிரதீப் ரங்கநாதன் சம்பளம் ரூ. 20 கோடி எனவும் கூறப்பட்டது.
இந்த படத்துக்கு பட்ஜெட் அதிகம் என்றும், ஹீரோ சம்பளம் அதிகம் என்பதாலும், அதை குறைக்குமாறு கமல் பட தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டது. ஆனால், அதை இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒத்துக்கொள்ளாததால், கமல் பட தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. தன்னுடைய கதைக்கு, அந்த கேரக்டருக்கு பிரதீப் ரங்கநாதன்தான் சரியான தேர்வு என்பதால் அவர் கேட்ட ரூ. 20 கோடி சம்பளத்துக்கு விக்னேஷ் சிவன் ஒத்துக்கொண்டார்.
லவ்டுடே என்ற ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே பிரதீப் ரங்கநாதன் தந்து இருக்கிறார். அதற்கு முன் ஜெயம் ரவி நடித்த கோமாளி படமும் ஆவரேஜ் வெற்றிப்படம்தானே தவிர பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஒரு படத்தை தந்துவிட்டு, ரூ. 20 கோடி சம்பளம் என அவர் கேட்பது சரியல்ல, என்று பட தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். லவ்டுடே படத்துக்கு பிறகு, பிரதீப் ரங்கநாதனை தேடி வந்த 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், பிரதீப் கேட்ட சம்பளத்தை கேட்டவுடன், இவ்வளவு கோடியா என அதிர்ந்து திரும்பி பார்க்காமல் ஓடி விட்டனர்.
ஆனால் இப்போது லியோ பட தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க சம்மதித்துள்ளார். ஆனால் அக்ரிமெண்ட் இன்னும் கையெழுத்தாகவில்லை என்று தெரிகிறது. லியோ படத்துக்கு பிறகு, தயாரிப்பதற்கு வேறு புராெஜக்ட் இல்லாததால் இந்த படத்தை லலித்குமார் ஒத்துக்கொண்டதாகவும் தெரிகிறது. ஆனாலும் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டு ரூ. 20 கோடி சம்பளம் கேட்பதெல்லாம் ரொம்பவும் ஓவர் என்று பலரும், பிரதீப் ரங்கநாதனை பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





