- Advertisement -
Homeபொழுதுபோக்குபான் இந்தியா ஸ்டார் ஆக திட்டம் தீட்டிய சிவகார்த்திகேயன்.. அவருக்கே தெரியாமல் வரப்போகும் ஆப்பு?

பான் இந்தியா ஸ்டார் ஆக திட்டம் தீட்டிய சிவகார்த்திகேயன்.. அவருக்கே தெரியாமல் வரப்போகும் ஆப்பு?

- Advertisement -

சின்னத்திரையில் போட்டியாளராக இருந்து பின்பு தொகுப்பாளராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். அதனையடுத்து 3 படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்தார்.ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் சுதாரித்துக்கொண்டு சினிமாவுக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் கற்று தேர்ந்தார். மேலும் அதிகம் ரிஸ்க் இல்லாத கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் லாவகமாக பயணித்துவருகிறார்.

சில காலத்திலேயே சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார் என பலரும் கணிக்க அந்த கணிப்பை அடித்து நொறுக்கி டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களின் மூலம் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து அனைவரையுமே ஆச்சரியப்படுத்தினார். அந்த இரண்டு படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்து தமிழின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக தற்போது ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜய் ஒரு மேடையில் இப்படி ஒரு கூறினார்; “சிவகார்த்திகேயன் கிட்ஸ் எல்லாத்தை பிடிச்சிட்டார்” என்று. அவர் சொன்னதுபோலவே தற்போதைய சிறுவர்களும், சிறுமிகளும் சிவகார்த்திகேயனை மிகவும் ரசிக்கின்றனர். இதன் காரணமாக விஜய் வளர்ந்து வரும்போது அவருக்கு எப்படி மவுசு இருந்ததோ அதே மவுசு சிவாவுக்கும் இருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

தனக்கு இருக்கும் கமர்ஷியல் வேல்யூவை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்தார். பைலிங்குவலாக உருவான அப்படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஓப்பன் செய்யலாம் என திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் அந்த திட்டம் தவிடுபொடியாகும் விதமாக பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் அமைந்துவிட்டது.

- Advertisement -

இதனையடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் கம்பேக் கொடுத்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார் எஸ்கே. ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். அந்தப் படமானது ராணுவத்தில் இருந்த கேப்டன் முகுந்த் என்பவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாவீரன் ப்ரோமோஷனின்போது சிவகார்த்திகேயன் ஹிந்தியில் அறிமுகமாகப்போகிறார் என்ற விஷயம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிவா பான் இந்தியா ஸ்டாராக திட்டம் போட்டுவிட்டார் என பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சிவாவின் பான் இந்தியா திட்டத்துக்கு அவருக்கே தெரியாமல் ஆப்பு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிரது. அதாவது, கேப்டன் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவர் இப்போது நடித்துவருவதாக கூறப்படும் படம் போலவே தெலுங்கிலும் முகுந்த்தின் வாழ்க்கை வரலாறை தழுவி ஒரு படம் வந்துவிட்டதாம்.

ஒருவேளை தற்போது உருவாகிவரும் 21ஆவது படம் தெலுங்கில் ரிலீஸாகும்பட்சத்தில் இது என்ன ஏற்கனவே வந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற பேச்சு எழும். அப்படி எழும்பட்சத்தில் சிவாவின் பான் இந்தியா ஸ்டார் என்ற கனவுக்கு ஆப்பு வர வாய்ப்பிருப்பதாக ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

- Advertisement -

சற்று முன்