- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க போவது ஏஆர் ரகுமானா? சாய் அபயங்கரா? - லேட்டஸ்ட்...

மணிரத்னம் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க போவது ஏஆர் ரகுமானா? சாய் அபயங்கரா? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். கடந்த 1986ம் ஆண்டில் வெளியான மௌன ராகம் படம் தான் அவர் இயக்கிய முதல் படம். அதில்தான் இயக்குனராக மணிரத்னம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் டைரக்ட் செய்த நாயகன் அக்னி நட்சத்திரம் கீதாஞ்சலி அஞ்சலி தளபதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

தளபதி படத்தின் போது மணிரத்னம் -இளையராஜா இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் தனது அடுத்த படம் ரோஜா படத்தில் இளையராஜாவிடம் உதவியாளராக கீபோர்டு வாசித்து கொண்டிருந்த இருந்த இளைஞர் ஏஆர் ரகுமானை இசையமைப்பாளராக மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். ரோஜா படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருந்தன. தனது முதல் படத்திலேயே ஏஆர் ரகுமான் முத்திரை பதித்தார்.

- Advertisement -

அன்று துவங்கிய ரோஜா படம் முதல் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான தக்லைஃப் படம் வரை மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஏஆர் ரகுமான்தான் இசையமைத்தார். அவர்கள் இருவரும் கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இந்நிலையில் மணிரத்னம் காதல் கதை திரைப்படமாக ஒன்றை இயக்க உள்ளார்.

விஜய் சேதுபதி சாய்பல்லவி ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இசையமைக்க இயக்குனர் மணிரத்னம் சார் அபயங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. வழக்கமாக ஏஆர் ரகுமானை கமிட் செய்யாமல் சாய் அபயங்கரை மணிரத்னம் கமிட் செய்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர் ஏஆர் ரகுமான். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்திடம் அதை ஒருபோதும் அவர் வெளிப்படுத்தியது இல்லை. நன்றி உணர்வுடன் நடந்து கொண்டார். அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக மணிரத்னம் இயக்கும் படங்களில் பணிசெய்த ஏஆர் ரகுமான் அவர் தருகிற குறைந்த சம்பளத்தை மகிழ்ச்சியாக பெற்றார்.

அப்படிப்பட்ட ஒருவரை இயக்குனர் மணிரத்னம் நிராகரிப்பதா என்கிற கடும் விமர்சனம் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தான் என்றும் அவர் ஏற்கனவே 2 பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்து விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் ரூ. 15 கோடிக்கு விலை பேசி வாங்கி விட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்