- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாரிடம் இப்படி வினோத பழக்கமா? இதுல என்ன அப்படி ஒரு சென்டிமென்டுன்னு தெரியலையே - விவரம்...

அஜீத்குமாரிடம் இப்படி வினோத பழக்கமா? இதுல என்ன அப்படி ஒரு சென்டிமென்டுன்னு தெரியலையே – விவரம் அறிந்து குழம்பிப் போன ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். அமராவதி படத்தில் அறிமுகம் ஆன அஜீத்குமார், பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் வளர்ந்தார். ஆசை, காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், சிட்டிசன் உள்ளிட்ட படங்களால் முன்னணி ஹீரோவாக அஜீத்குமார் மாறினார்.

இப்போது தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜீத்குமார் என நான்கு பேர் மட்டுமே, தமிழ் சினிமாவில் 4 தூண்களாக நிற்கின்றனர். இவர்களது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும், இவர்கள் நடிக்கும் படங்களை இயக்கவும் இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.

நடிகர் அஜீத்குமார் இப்போது குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் அவர் நடித்த விடாமுயற்சி படம், இன்னும் படப்பிடிப்பு மீதம் உள்ளது. இந்த படப்பிடிப்புக்கு இடையே சில வாரங்கள் ஒதுக்கி அந்த படத்தை முடித்து விடவும் அஜீத்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விடாமுயற்சி, அதைத்தொடர்ந்து குட்பேட் அக்லி என 2 படங்களும் திரைக்கு வர இருக்கிறது.

நடிகர் அஜீத்குமார் ஸ்போர்ட்ஸ் பிரியர். குறிப்பாக பைக்கில் நீண்ட தூரம் டூர் செல்வது, பைக் ரேஸ்கள், கார் ரேஸ்களில் கலந்துக்கொள்வது, துப்பாக்கி சுடுதல் மற்றும் கைகளால் ஹெலிகாப்டர் இயக்குவது உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். சினிமா ஷூட்டிங் இல்லாத நாட்களில் இவற்றில்தான் அஜீத்குமார் ஆர்வம் காட்டுவார்.

அஜீத்குமார் இடையில், பைக் டூர் செல்வது வழக்கம். அப்போது அவருக்கு பின்னால் ஒரு பெரிய வேனில், அவரது பாதுகாப்பு ஆட்களும், அவரது உதவியாளர்களும் செல்வது வழக்கம். பைக் பின்னாலேயே அஜீத்தை பின் தொடர்வார்கள். அப்படி செல்லும் போது பைக் ஏதும் ரிப்பேர் ஆகி விட்டால், வேனில் வரும் உதவியாளர்கள் வந்து பைக்கை பழுதை சரிசெய்து தருவார்கள். அதே பைக்கில் பயணத்தை தொடர்வார் அஜீத்குமார்.

ஆனால் பைக் டயர் பஞ்சராகி விட்டாலோ, பைக் டயர் வெடித்து விட்டாலோ அந்த பைக்கை அப்படியே அதே இடத்தில் போட்டுவிட்டு வேறு பைக்கில் அங்கிருந்து கிளம்பி விடுவாராம் அஜீத்குமார், அந்த பைக்கை பின்னால் வேனில் வரும் யாரும் எடுக்க வேண்டாம், வேறு யாராவது வழிப்போக்கர்கள் அதை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் கூறிவிடுவது அஜீத்குமாரின் வழக்கம் என்று இந்த தகவலை, சமீபத்திய வீடியோவில் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

சற்று முன்