- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதென்ன செய்யக்கூடாத தவறா? இதுல மறைக்கறதுக்கு ஒண்ணும் இல்லையே, இதுல அவருக்கு அப்படி என்ன தயக்கம்...

இதென்ன செய்யக்கூடாத தவறா? இதுல மறைக்கறதுக்கு ஒண்ணும் இல்லையே, இதுல அவருக்கு அப்படி என்ன தயக்கம் – கடும் விமர்சனங்களில் சிக்கிய நடிகர் அஜீத்குமார்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், தன்னுடைய படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் கூட பல ஆண்டுகளாக கலந்துக்கொள்வதில்லை. இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் பங்கேற்க வேண்டும் என்ற நெருக்கடி தரும் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் அஜீத் நிச்சயம் நடிக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி.

இப்போது, சென்னையின் பல பகுதிகள் மழைவெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன், பாலிவுட் நடிகர் அமீர்கான், தமிழ் பட நடிகர் விஷ்ணுவிஷால் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட. அப்பகுதிக்கு படகு அனுப்பி அவர்களை மீட்டுள்ளார். மூவரும் எடுத்துக்கொண்ட போட்டோவும் செம வைரலானது.

- Advertisement -

இந்நிலையில், தமிழ் மக்களின் குரல் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா, உங்கள் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் ரசிகர்கள் பலரும், அவர்களும் குடும்பங்களும் இதே போல் வெள்ளத்தில்தான் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் ஒரு போட் அனுப்பியிருக்கலாமே என கிண்டலடிக்கும் விதமாக நடிகர் போஸ் வெங்கட் ஒரு பதிவை போட அதுவும் பயங்கர வைரலானது.

இதையடுத்து அஜீத் ரசிகர்கள் எப்படி எங்கள் தலைவரை பற்றி தவறாக பேசலாம், அவர் உதவி செய்வதை விளம்பரப்படுத்த மாட்டார் என்ற போஸ்வெங்கட் பதிவுக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். இன்னும் சிலர் போஸ் வெங்கட்டை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.

- Advertisement -

மிக்ஜம் புயல் பாதிப்புக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி தரப்பில் தரப்பட்டுள்ளது. பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். கேபிஒய் பாலா, தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து ரூ. 1000 வீதம் 200 பேருக்கு தந்து உதவியுள்ளார்.

ஆனால் அஜீத் வெளிப்படையாக தெரியாமல் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். நண்பர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார் போன்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பிறருக்கு உதவுவது அசிங்கமான, பிறருக்கு தெரியக் கூடாத மிக மோசமான விஷயம் கிடையாது. இதில் மறைக்க என்ன இருக்கிறது. இதை வெளிப்படுத்த அஜீத்குமாருக்கு என்ன தயக்கம். உதவியே செய்யாமல் இப்படி எல்லாம் கிளப்பி விடாமல் உண்மையாக அவரை வெளிப்படையாக உதவச் சொல்லுங்கள் எனவும் சமூக வலைதளங்களில் சர்ச்சை அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்