நடிகர் அஜீத்குமார், கடந்த 4 மாதங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வந்தார். அஜர்பைஜானில் நடந்து வந்த இந்த ஷூட்டிங் பலமுறை தடைபட்டு தடைப்பு நடந்தது. இன்னும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்படாத நிலையில், இனி அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்த முடியாது என்ற நிலைக்கு படக்குழு வந்துவிட்டது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அங்கு நிலவும் இயற்கை சூழல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அஜர்பைஜான் அழகான லொக்கேஷனலாக இருந்தாலும் அடிக்கடி பனிப்பொழிவு, கடும் குளிர், திடீர் கனமழை, மணல் புயல், சூறாவளி என பலமுறை ஷூட்டிங் நடப்பதை தடுத்து விட்டது. படக்குழு படப்பிடிப்பை நடத்துவதே பெரும் போராட்டமாக மாறி விட்டது.
இதையடுத்து படப்பிடிப்புக்குழு சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பியிருக்கிறது. துபாயில் அஜீத்குமாருக்கு சொந்தமாக வீடு மற்றும் அலுவலகம் இருப்பதால், அவர் அங்கு சென்றுவிட்டார். மீண்டும் இனி ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இனிமேல் அஜர்பைஜான் பக்கமே எட்டிப் பார்க்க கூடாது என்ற அளவுக்கு கசப்பான அனுபவத்தை விடாமுயற்சி படக்குழுவினருக்கு அஜர்பைஜான் தந்துவிட்டது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எந்தவிதமான தகவலும், புகைப்படமும் வெளியே போகக் கூடாது என, ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவரது மொபைல் போன்களும் பறிக்கப்பட்டு, மாலை அல்லது இரவில் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜர்பைஜானில் நடந்தது. அஜீத்குமார் கெட்டப் வெளியே தெரியக்கூடாது என ரகசியம் காக்கப்பட்டது.
இந்நிலையில் அஜீத்குமார் தனது புதிய லேட்டஸ்ட் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். விளம்பரமே விரும்பாத அவர், திடீரென தனது வித்யாசமான கெட்டப் புகைப்படங்களை அப்டேட் செய்திருப்பது, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கான காரணமாக, நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கப் போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. விஜய் அடிக்கடி பேசுபொருளாகி மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறார். இதனால் கடுப்பான அஜீத்குமார், வேண்டுமென்றே தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப இந்த வேலையை செய்திருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.





