தொழிலில் நீண்டகால அனுபவம் உள்ள தொழிலதிபர்கள் வியாபாரிகள் தொழிலை ஒரு சூதாட்டம் போன்றது என்று ஒப்பிட்டுச் சொல்வார்கள். ஏனெனில் தொழிலை பொருத்த வரை எப்போது லாபம் நஷ்டம் என்பதை உறுதியாக கணிக்க முடியாது. நேரம் காலத்தை பொறுத்து சூழல்களை பொறுத்து ஒரு தொழிலில் வியாபாரத்தில் லாபம் நஷ்டம் என்பது அமையலாம்.
சினிமா துறைக்கும் இது கண்டிப்பாக பொருந்தும். ஒரு படம் மாஸ் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்த்து உருவாக்குவார்கள். ஆனால் படம் வெளியான 4 நாட்கள் கூட ஓடாமல் பலத்த நஷ்டத்தை சந்திக்கும். சினிமா என்பது ஒரு கூட்டுமுயற்சி. இதில் தயாரிப்பாளர் ஹீரோவை இயக்குனரை நம்பிதான் பல நூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறார்.
இதில் படம் சொதப்பி விட்டால் ஹீரோ டைரக்டரை விட மிக மோசமான சிக்கலில் தயாரிப்பாளர்தான் மாட்டிக்கொள்கிறார். இப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்களின் படங்கள் ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் பலத்த தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தை தயாரிக்க எந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமும் முன்வர மறுக்கிறது. சன் பிக்சர்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் லைகா புரடக்சன்ஸ் பேஷன் ஸ்டுடியோ மைத்ரி மூவி மேக்கர்ஸ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தியும் நோ சொல்லி விட்டன.
கடைசியாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுலும் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில், கள நிலவரம் சரியில்லாததால் அவரும் நஷ்டத்துக்கு பயந்து பின்வாங்கி விட்டார். அதன்பிறகு செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரூ. 186 கோடிக்கு பதிலாக ரூ.125 கோடியாக அஜீத்குமாரின் சம்பளத்தை குறைத்துக்கொண்டால் நான் ஏகே 64 படத்தை தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அஜீத்குமார் சம்பளத்தை குறைக்க தயாராக இல்லை. அவர் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு தயாரிப்பாளர் அதிக லாபம் சம்பாதிக்க கூடாது என கருதுகிறார். ஆனால் களத்தின் உண்மை நிலவரம் அதுவல்ல. ஹீரோவுக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்தால் தயாரிப்பாளர்தான் நஷ்டப்பட வேண்டும். அதனால் அதிக சம்பளம் கேட்கும் ஹீரோக்கள், அவர்களது படத்தை அவர்களே சொந்தமாக தயாரித்தால்தான் உண்மையில் கள நிலவரம் தெரிய வரும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





