- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பை விமான நிலையத்துக்கு வந்த ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன், இப்படி வரம்பு மீறி...

மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன், இப்படி வரம்பு மீறி நடந்துக்கலாமா? – கிளம்பியாச்சு அடுத்த பஞ்சாயத்து…

- Advertisement -

இயக்குனர் சுகுமாரன் இயக்கிய புஷ்பா புஷ்பா 2 ஆகிய படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டார் நடிகராக இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். ஐகான் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுகிறார். இப்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு சயன்டிபிக்சன் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டில் வெளியான புஷ்பா 2 படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் போலீஸ் அனுமதியின்றி திரையிடப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த 9 வயது மகனும் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடிகர் அல்லு அர்ஜூனனை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

- Advertisement -

அந்த சர்ச்சை இன்னும் ஓயாமல் உள்ளது. சமீபத்தில் மனித உரிமைகள் ஆணையம் தெலுங்கானா அரசுக்கு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மும்பை விமான நிலையத்தில் நடந்த ஒரு விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நேற்று நடிகர் அல்லு அர்ஜூன் விமானத்தில் பயணிப்பதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த விமான நிலைய பாதுகாப்பு ஊழியர், நடிகர் அல்லு அர்ஜுன் அணிந்திருந்த மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை முக அடையாளம் பார்ப்பதற்காக அகற்றுமாறு சொன்னார். அதைக் கேட்டு அல்லு அர்ஜூன் திடுக்கிட்டார். அப்போது அவரது பக்கத்தில் இருந்த அல்லு அர்ஜூனனின் உதவியாளர் பாதுகாப்பு ஊழியரிடம், இவர் நடிகர் அல்லு அர்ஜூன்தான், முகக் கவசம் கழட்ட மாட்டார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத விமான நிலைய ஊழியர், அவற்றை கழட்டுமாறு வற்புறுத்தி கூறிக் கொண்டிருந்தார். இதனால் பொறுமை இழந்த நடிகர் அல்லு அர்ஜூன் சில வினாடிகள் மட்டும் மாஸ்க் மற்றும் கூலிங்கிளாசை கழட்டி விட்டு மீண்டும் அவற்றை அணிந்து கொண்டார். இதை அங்கிருந்து பார்த்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வைரலாக்கி விட்டார்.

விமான நிலையம் என்பது மக்கள் பாதுகாப்புக்குரிய ஒரு முக்கியமான இடம். அங்கு வந்து செல்பவர்கள் விமான நிலைய பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மதிக்க வேண்டும். அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும். ஆனால் விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் அல்லு அர்ஜூன் கூலிங் கிளாஸ், மாஸ்க் போன்றவற்றை கழட்டாமல் மரபு மீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். யாராக இருந்தாலும் இந்திய சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று பலரும் அல்லு அர்ஜூனுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்