- Advertisement -
தெலுங்கு சினிமாவில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் தெரிய வந்துள்ளது. புஷ்பா 2 படம் வெளியாகி நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ராக்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையே அவர் தயாரிப்பாளராக மாறுவதும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.





