- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது கருப்பு படத்தில் நடிகர் ஆர்யாவும் நடித்திருக்கிறாரா? அட உருட்டு இல்லீங்க உண்மைதான், ஆனால் ஆர்ஜே...

என்னது கருப்பு படத்தில் நடிகர் ஆர்யாவும் நடித்திருக்கிறாரா? அட உருட்டு இல்லீங்க உண்மைதான், ஆனால் ஆர்ஜே பாலாஜி இப்படி பண்ணிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. தமிழ் ரசிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்திருக்கிறார். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான படம் மிஸ்டர். எக்ஸ் படத்துக்கு பிறகு ஆர்யா அனந்தன்காடு என்ற படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் வருகிற ஜூன் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்தன்காடு படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் ஆர்யா மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படம் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஆர்யா ஒரு முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கருப்பு படம் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது, கருப்பு படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் (கேமியோ ரோல்) நடிக்குமாறு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி என்னிடம் கேட்டார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நான் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டேன். அந்த கேரக்டர் எவ்வளவு பெரியது என்பது குறித்து நான் அவரிடம் எதுவும் கேட்காமல் நடித்துக் கொடுத்தேன்.

பின்னர் நான் நடித்த காட்சிகள் எடிட்டிங் செய்யும்போது நீக்கப்பட்டு விட்டதாக என்னிடம் ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார். என்றாலும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நடித்த என்னுடைய காட்சிகள் நீக்குவது படத்தை இன்னும் சிறப்பாக மாற்றும் என்றால் அதுவே படத்துக்கு முக்கியம் என்று நான் அவரிடம் கூறினேன் என்று நடிகர் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் கருப்பு படத்தில் நான் நடித்த காட்சிகள் தியேட்டரில் மற்றும் ஓடிடியில் வெளியாகவில்லை என்றாலும் யூடியூப்பில் அதை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனெனில் ஆர்யா நடித்த கேமியோ ரோல் காட்சி இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி மீதுள்ள நட்பு காரணமாக கருப்பு படத்தில் ஆர்யா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். படத்தில் வரும் ஏதேனும் சில காட்சிகளை தவிர்த்து விட்டு ஆர்யா நடித்த காட்சியை படத்தில் சேர்த்திருக்கலாம். பாடல் காட்சியை கூட வெட்டியிருக்கலாம். இப்படி ஆர்யா நடித்த காட்சியை சத்தமே இல்லாமல் ஆர்ஜே பாலாஜி வெட்டியது ஆர்யாவுக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்