- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அட்டக்கத்தி தினேஷூக்கு வாழ்த்து தெரிவித்த வருங்கால மனைவி - பிறந்த நாளில் வெளிச்சத்துக்கு வந்த...

நடிகர் அட்டக்கத்தி தினேஷூக்கு வாழ்த்து தெரிவித்த வருங்கால மனைவி – பிறந்த நாளில் வெளிச்சத்துக்கு வந்த காதல் ரகசியம்!

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டக்கத்தி. இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்ததால் அதன்பிறகு அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்படுகிறார். தமிழில் நல்ல நடிகராக ரசிகர்களிடம் பெயர் பெற்றவர்.

தொடர்ந்து விசாரணை குக்கூ ஒருநாள் கூத்து கபாலி அண்ணனுக்கு ஜே இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களில் தினேஷ் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். இப்போது வேட்டுவம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 27ம் தேதி நடிகர் அட்டக்கத்தி தினேஷ் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்த நண்பர்களும் அவரது ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது விஜே எழிலரசி என்பவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அட்டக்கத்தி தினேஷ் தனது காதலர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

40 வயதுகளை கடந்தும் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் திருமணம் செய்யாத நிலையில், சில நேர்காணல்களில் அவரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர் ஒரு பெண்ணை காதலித்த வருவதாக சூசகமாக கூறியிருந்தார். இப்போது அந்த பெண் பிரபல விஜே ஆக உள்ள எழிலரசி என்பது உறுதியாகி விட்டது.

நடிகர் அட்டக்கத்தி தினேஷூடன் அவர் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜே எழிலரசி, என்னவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான தொகுப்பாளர் விஜே எழிலரசி தனியார் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சினிமா நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்தும் வருகிறார். இந்த நிலையில் நடிகர் அட்டக்கத்தி தினேஷின் வருங்கால மனைவி விஜே எழிலரசி தான் என்பது அவரது 42வது பிறந்த நாளில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உறுதியாகி உள்ளது.

சற்று முன்