இயக்குனர் ஷங்கர் அடுத்து வேள்பாரி என்ற வரலாற்று படத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களின் படுதோல்வி பிறகு மீண்டும் பீனிக்ஸ் பறவை போல தன்னை ஒரு பிரமாண்ட இயக்குனராக நிரூபிக்கும் வகையில் களத்தில் படுசுறுசுறுப்பாக ஷங்கர் இறங்கியிருக்கிறார்.
மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை 3 பாகங்களாக திரைப்படமாக ஷங்கர் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் சொல்லப்படுகிறது.
மதுரையை சேர்ந்த பென் மீடியா என்ற பெரிய நிதிநிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படம் வரலாற்று பின்னணியில் மன்னர் காலத்து கதைக்களம் என்பதால் பாகுபலி பொன்னியின் செல்வன் படங்களை போல அரசர் காலத்துக்கு கதை என்பதால் அதற்கேற்ப நடிகர் நடிகைகளை ஷங்கர் தேர்வு செய்து வருகிறார்.
இந்த சூழலில் இப்போது வேள்பாரி படத்தில் முக்கிய கேரக்டரில் அதாவது மல்டிபிள் ஹீரோக்களில் ஒருவராக நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இயக்குனர் ஷங்கர் அவரிடம் பேசியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க 2 ஆண்டுகள் வரை ஷங்கர் நடிகர் தனுஷிடம் கால்ஷீட் கேட்டதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் இப்போது ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் தருகிறார். அதற்காக ரூ. 60 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் அவருக்கு ஏற்கனவே கமிட் ஆன படங்கள் அடுத்தடுத்த லைன் அப்பில் இருந்து வருகிறது. இந்த சூழலில் 2 ஆண்டுகள் கால்ஷீட் என்பது ஷங்கர் படத்தில் சாத்தியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வழக்கமாக ஷங்கர் படம் என்றாலே 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதிலும் வேள்பாரி 3 பாகங்களாக உருவாகும் வரலாற்று படம். மன்னர் காலத்துக்கு கதைக்களம் என்பதால் அதிக நாட்கள் தேவைப்படும் என்ற சூழலில் 2 ஆண்டுகளில் குறிப்பிட்ட நாட்களில்தான் தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்க போகிறார். மற்ற நாட்களில் அவர் கமிட் ஆன மற்ற படங்களில் நடித்துக்கொள்ளலாம் என்பதால் ஷங்கர் பட வாய்ப்பை தனுஷ் மறுக்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





