எப்போதுமே உச்ச நட்சத்திர ஹீரோக்களுடன் நடிப்பது மற்ற இளம் நடிகர்களுக்கு குறிப்பாக வளரும் நடிகர்களுக்கு பெரிய அளவில் அடையாளத்தை கொடுக்கும். அந்த வகையில் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்றவர்களுடன் நடிக்க பலரும் போட்டியே போடுவார்கள்.
அந்த வகையில் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பகவதி. இதில் கோர்ட்டில் டீக்கடை நடத்தி வரும் விஜய் ஒரு கட்டத்தில் பெரிய டான் ஆக மாறிவிடுவதுதான் கதை. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். அதன்பிறகு ஜெய் விஜய் படம் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் பல படங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெய் கூறியதாவது, எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு விஜயிடம் என்ன அண்ணா தம்பியா நடிக்க என்னை கூப்பிடவே மாட்டீங்கறீங்க? என்று அவரிடம் சான்ஸ் கேட்டேன். ஏன் தம்பியா மறுபடியும் நடிக்கணும்ன்னு கேட்கறே? என்று கேட்டார்.
இல்லண்ணே, பகவதி படத்துல தம்பியா சரியா நான் நடிக்கலே என்றேன். அப்போது இன்னொரு தடவை பகவதியை எடுப்போமோன்னு கிண்டலா கேட்டார். மறுபடியும் உங்க கூட சேர்ந்து ஒரு படம் பண்ணனும்ன்னு ஆசையா இருக்குதுண்ணே என்று சொன்னேன்.
அப்புறம் அவரோட பல படங்களில் தம்பியாக நடிக்க கேட்டேன். வசீகரா புதிய கீதை படத்துல கேட்டேன். திருமலை படத்துல கேட்டேன். அப்புறம் சச்சின் படத்துல கேட்டேன். இல்லேப்பா இதுல அப்படி ஒரு ரோலே இல்லை என்று விஜய் சொல்லிட்டார்.
அப்புறம் திருப்பாச்சி படத்துல போய் கேட்டேன். அண்ணா இதுல தம்பி ரோல் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க பண்றேன் என்று சொன்னேன். இல்லப்பா, இதுல தங்கச்சி ரோல் தான் இருக்கு. என்ன பண்ணலாமுன்னு கேட்டார். இல்லண்ணே நான் வீட்டுக்கு கௌம்பறேன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன் என்று நடிகர் ஜெய் கூறியிருக்கிறார்.





