தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், சமீபகாலமாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்த வருகிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான அகிலன், இறைவன், சைரன் 108 மற்றும் கடந்த தீபாவளிக்கு வெளியான பிரதர் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தன.
ஆனால் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் ஜெயம் போகன் பேராண்மை வனமகன் சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்கள் பெரிய ஹிட் படங்களாக இருந்தன. பெண்கள் விரும்பும் ஒரு அழகான நாயகனாக தமிழ் சினிமாவில் அவர் வலம் வந்தார்.
இப்போது ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. அத்துடன் இன்னும் சில புதிய படங்களில் நடிக்க ஜெயம் ரவி கமிட் ஆகி இருக்கிறார். மும்பையில் அவர் செட்டில் ஆனதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவர் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, நான் இதுவரை நடித்த படங்களில் மிக முக்கியமானது பேராண்மை. எனது சினிமா பயணத்தில் மறக்க முடியாத சிறப்பான ஒரு படமாக உள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது.
என்னை எனக்கே புதிதாக அடையாளம் காட்டிய படம் எதுவென்றால் அது பேராண்மைதான். நம்மால் இதை செய்ய முடியும், சினிமாவில் நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று உணர்த்தியதும் இந்த படம்தான். இந்த படத்தின் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் நம்முடன் இப்போது இல்லை என்றாலும், பேராண்மை படத்தின் மூலம் அவர் நம்முடன்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.
பேராண்மை படத்தில் என்சிசி மாஸ்டராக துருவன் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி மிக சிறப்பாக நடித்திருந்தார். கல்லூரி மாணவிகள் 5 பேருடன் வனாந்திர காட்டுக்குள் செல்லும் அவர், அந்த மாணவிகளுடன் உதவியுடன் எதிரிநாட்டு அன்னிய சதி திட்டங்களை முறியடிப்பதுதான் இந்த படத்தின் கதை. உண்மையில் இந்த படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்புமுனை படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





