- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்புக்காக அல்ல, அந்த ஒரு விஷயத்துக்காக 3 முறை கேரளம் அரசின் விருதை பெற்றேன் -...

நடிப்புக்காக அல்ல, அந்த ஒரு விஷயத்துக்காக 3 முறை கேரளம் அரசின் விருதை பெற்றேன் – நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் ஜெயராம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஜெயராம். கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் என்றாலும் தமிழில் இவருக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயராம் கூறியதாவது, எனக்கு கேரளாவில் சொந்தமாக விவசாய பண்ணை இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் அங்கு சென்று விடுவேன். அங்கு அதிகாலை 3.30 மணிக்கே எனக்கு வேலை ஆரம்பித்து விடும். மாடுகள் பால் கறப்பது தீவணம் போடுவது கொட்டகை சுத்தம் செய்வது என பல வேலைகள் ஈவ்னிங் வரை தொடர்ந்து இருக்கும்.

- Advertisement -

அந்த வேலைகளில் நான் ரொம்ப பிஸியாக இருப்பேன். அதை ரொம்பவும் என்ஜாய் பண்ணுவேன். இங்கே படம் இல்லை என்றால் நேராக அங்குதான் செல்வேன். அதுபோக மீதி நேரம் கிடைச்சா அதில் சென்டா இசை வாசிப்பேன். எனக்கு இதுவரை 3 முறை கேரளம் மாநில அரசின் விருதுகள் கிடைத்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் சிறந்த விவசாய பண்ணை விருது அப்புறம் பெஸ்ட் பார்ம் விருது அதுக்கு அப்புறம் 2020ம் ஆண்டில் சிறந்த விவசாயி என்று கேரளம் அரசின் 3 விருதுகள் எனக்கு கிடைத்துள்ளது. இதில் ஒரு விவசாயியாக நான் விருதுகள் பெற்றதை பெருமையாக கொள்கிறேன்.

- Advertisement -

சிறந்த விவசாயி என்ற கேரள அரசின் விருதை நான் பெற்ற போது கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ பேர் என்னை அழைத்து போனில் பாராட்டியது என்னால் மறக்க முடியாது. இத்தனை வருஷம் நான் சினிமாவில் நடித்ததை விட சிறந்த விவசாயி விருது பெற்றதை பெரிதாக எடுத்துக்கொண்டு பாராட்டினர்.

ஒரு நடிகன் என்பதை விட ஒரு விவசாயி என்னும் போது மக்கள் எவ்வளவு பெருமையாக நினைக்கிறார். வாழ்த்துகளை பாராட்டுகளை சொல்கிறார் என்று தெரிய வந்த போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஒரு விவசாயி என்பதை பெரிய பேறாக கருதுகிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் ஜெயராம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்