மிமிக்கிரி கலைஞராக வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் மூலம் இவர் தனது திறமையை திரைத்துறைக்கு வெளிப்படுத்தினார். இவரின் திறமை காரணமாக இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தனுஷ், விஷா, அஜித் என பல்வ்வேறு நடிகர்களுடன் தனது காமெடி பயணத்தை தொடங்கினார்.

மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். அடிக்கடி திரைப்படங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர் திடீரென திரையுலகில் இருந்து மாயமானார். கம்பீரமான உடலுடன் காணப்பட்ட ரோபோ ஷங்கர் திடீரென முற்றிலுமாக எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார். படத்திற்காக அவர் தனது எடையை குறைத்துள்ளதாக கூறப்பட்டாலும், அதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த ரோபோ சங்கர், 5 மாதங்களுக்கு முன் அவர் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தனக்கு இருந்த சில கெட்டபழக்க வழக்கமே தற்போதைய நிலைக்கு காரணம் என ரோபோ சங்கர் கூறியிருந்தார். இதன் காரணமாக அவர் போதை பழங்கங்களுக்கு அடிமையாகி இருந்தாரா என கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல்நலம் குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோ ஷங்கரின் உடல் நிலை குறித்து கமல் ஹாசன் தொலைபேசியின் மூலம் விசாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ரோபோ ஷங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கமல் ஹாசன் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய ரோபோ ஷங்கர், “அனைத்திலும் கட்டுப்பாடுடன்தான் இருக்கிறேன். கமல் ஹாசனின் புண்ணியத்தில் எனக்கு எதுவும் நடக்காது. 6 மாதங்களில் என்னுடைய மகளுக்கு திருமணம் நடத்தவிருக்கிறேன். நீங்கள் அந்தத் திருமணத்திற்கு வந்தாலே போதும் என் பிறவி பலன் அடைந்துவிடும். உங்களிடம் கேட்காமல் மகளின் திருமண தேதியை முடிவு செய்யமாட்டேன் என்று கூறினார். ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விசாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





