- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கே பாக்யராஜ் படத்தின் டைட்டிலில் நடிக்கும் நடிகர் மணிகண்டன்… அட இயக்குனருக்கு இப்படி ஒரு...

நடிகர் கே பாக்யராஜ் படத்தின் டைட்டிலில் நடிக்கும் நடிகர் மணிகண்டன்… அட இயக்குனருக்கு இப்படி ஒரு சான்ஸா? – இது வேற லெவல் ப்ரோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற நடிகராக இருந்து வருபவர் மணிகண்டன். வளர்ந்து வரும் கலைஞராக தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருகிறார். காதலும் கடந்து போகும் ஏலே நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த மணிகண்டன் ஒரு டப்பிங் கலைஞர். ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்தவர்.

ஆனால் ரஜினிகாந்துடன் காலா படத்தில் அவருக்கு மகன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் லாக்கப்பில் விசாரணை கைதியாக கொடூரமாக அடித்து கொல்லப்படும் மணிகண்டனின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது.

- Advertisement -

அதன்பிறகு இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட்நைட் படத்தில் மோட்டார் மோகன் கேரக்டரில் மணிகண்டன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக மிதா ரகுநாத் நடித்திருந்தார். தற்போது வெளியான 3 பிஹெச்கே படத்தில் சரத்குமாரின் மகளாக, சித்தார்த்தின் தங்கையாகவும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

குட்நைட் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் படமும் அதையடுத்து இயக்குனர் ராஜேஷ்வர் காளிச்சாமி இயக்கிய குடும்பஸ்தன் படமும் நடிகர் மணிகண்டனுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த படங்களை தொடர்ந்து இப்போது நடிகர் மணிகண்டன், இயக்குனர் பா ரஞ்சித் உதவியாளர் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு மக்கள் காவலன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை நடிகர் மணிகண்டன், இயக்குனர் குமாருக்கு தந்தஇருக்கிறார். அந்த படத்தின் டைட்டில் சுந்தரகாண்டம் என வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டில் நடிகர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த படம் சுந்தரகாண்டம். இந்த படத்தில் பானுப்பிரியா சிந்துஜா ஜூனியர் பாலையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் பள்ளி ஆசிரியராக கே பாக்யராஜ் நடித்திருப்பார். இப்போது இந்த படத்தின் டைட்டிலில்தான் நடிகர் மணிகண்டன், தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்