நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன் கதாநாயகன் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சில படங்களை அவரே சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார். கடைசியாக அவரது படத்தில் சரக்கு என்ற படம் வெளியானது. வேலூர் தொகுதியில் கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தமிழ் சினிமாவில் யதார்த்தமான சில நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். ஒரு சினிமா நடிகருக்கு உரிய பந்தா தெனாவெட்டு ஆட்டிட்யூட் இல்லாமல் சக மனிதர்களிடம் சகஜமாக பேசிப் பழகக் கூடிய நல்ல மனிதர் என்று பலராலும் பாராட்டப்படுபவர். ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்து பிறகு அடியாட்களில் ஒருவராக நடித்து பிறகு வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.
சமீபத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமணம் சென்னையில் நடந்தது. இதில் தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்து நடிகர் கிங்காங் முன்னணி நடிகர்கள் பலருக்கும் அழைப்பிதழ் வைத்து நேரில் சென்று அழைத்தார். ஆனால் எந்த பெரிய நடிகர்களுமே இந்த திருமண விழாவுக்கு வருகை தரவில்லை.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் கிங்காங் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். இன்னும் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆனால் நடிகர்கள் தரப்பில் யாருமே இந்த திருமணத்துக்கு எட்டிப் பார்க்கவில்லை. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கிங்காங் என்னை மன்னிச்சிடுப்பா. ரொம்ப ரொம்ப ஸாரி. இங்க மதுரை பக்கம் வந்து ஒரு ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டேன். ரொம்ப சின்ன கம்பெனி. அதனால வர முடியலே. கல்யாணம் நல்லபடியா நடந்ததா?
நான் சென்னைக்கு வந்த உடனே வீட்டுக்கு நான் வரேன். தப்பா எடுத்துக்காதீங்க. நான் சென்னைக்கு வந்த உடனே பொண்ணு மாப்பிள்ளை எங்க இருக்காங்களோ அங்கு வந்து நேர்ல அவங்களை வாழ்த்திட்டு வரேன். என்ன பண்றது, இங்க வேலையை விட்டுட்டு வர முடியலே. தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க என்று அந்த வீடியோவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





