- Advertisement -
Homeபொழுதுபோக்குகள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நெத்தியடி கேள்வியை எழுப்பிய நடிகர் மன்சூர் அலிகான், அரசாங்கம் முதலில் இதற்கு...

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நெத்தியடி கேள்வியை எழுப்பிய நடிகர் மன்சூர் அலிகான், அரசாங்கம் முதலில் இதற்கு பதில் சொல்லுமா? – ரசிகர்கள் ஆதங்கம்!

- Advertisement -

சினிமாவில் ஹீரோவாக வந்து பில்டப் செய்யும் பல கதாநாயகன்கள், சினிமாவில் மட்டுமே அநியாயம், சமூக குற்றங்கள் நடந்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்து, தட்டிக் கேட்பார்கள். வீரவசனம் பேசுவார்கள். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள். ஆனால் உண்மை வாழ்க்கையில், பொதுமக்களுக்கு என்ன அநியாயம் நேர்ந்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்த கொடுமையான சம்பவத்தில் குறிப்பிட்ட சிலரை தவிர யாருமே வாய் திறக்கவில்லை. ஆளுங்கட்சியின் அலட்சியமான நிர்வாகமும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கும்தான் இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிந்தும் பலரும் இதுகுறித்து குரல் எழுப்பவில்லை.

- Advertisement -

ஏனென்றால் ஆளுங்கட்சிக்கு எதிராக ஏதேனும் வார்த்தைகள் சொல்லிவிட்டால், அவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால், வருமானம் போய்விடுமே, இந்த சொகுசான வாழ்க்கைக்கு பிரச்னை வந்துவிடுமே என்ற சுயநலம் மட்டுமே காரணம். ஆனால், அவர்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே ஹீரோயிசத்தை காட்டி கைதட்டல் வாங்கி விடுவார்கள்.

ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் போன்ற இரண்டாம் நிலை நடிகர்கள் கூட, தங்களது கருத்துகளை பொதுவெளியில் சர்வ சாதாரணமாக முன்வைக்கின்றனர். அவர்களின் குரல், ஒரு சமுதாய அக்கறை கொண்ட மனிதனின் குரலாக தான் வெளிப்படுகிறது. மக்கள் மீதான அக்கறை, அரசாங்கத்தின் மீதான கோபம் அதில் உண்மையாக பிரதிபலிக்கிறது.

- Advertisement -

சமீபத்தில், சூரியனும் சூரியகாந்தியும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்தவர்கள், உடனே இறந்து விட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்து, தினமும் மது விற்கிறார்கள். அதை குடிப்பவர்கள், இரண்டு ஆண்டுகளோ, இன்னும் சில ஆண்டுகளோ கழித்து உடல் நலம் கெட்டு இறந்து போவார்கள்.

இப்போது நாம் பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட ஆண்டுக்கணக்கில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த சிலர், இறந்திருப்பார்கள். ஆனால் அது வெளியில் தெரிவது இல்லை. இதுபோன்ற இறப்புகளை தடுக்க மது விற்பனையை ஒழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்துடன், மதுக்கடைகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்று பேசியிருக்கிறார். உண்மையை பகிரங்கமாக பேசியதால், ரசிகர்கள் பலரும் மன்சூர் அலிகானை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்