- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள்… விஜயகாந்த் புகழ் பாடிய நடிகர் மன்சூர் அலிகான்!

கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள்… விஜயகாந்த் புகழ் பாடிய நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்துக்கு மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தந்த படங்களில் இது மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது. இந்த படத்துக்கு பிறகுதான் விஜயகாந்தை ரசிகர்கள் கேப்டன் என அழைக்க துவங்கினர். இந்த படத்தில் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை படமாக ஆர்கே செல்வமணி உருவாக்கியிருந்தார்.

இந்த படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் ரூபிணி காந்திமதி பீலிசிவம் லிவிங்ஸ்டன் என பலரும் நடித்திருந்தனர். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. இந்த படத்தில் விஜயகாந்த் அரசியல்வாதிகள், அரசியல் நிர்வாகம் குறித்தும் விமர்சனம் செய்து பேசியிருந்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் வீரப்பன் கதையில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில்தான் அவர் வில்லன் நடிகராக அறிமுகமானார். கேப்டன் பிரபாகரன் படம் வரும் 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக நடந்த விழாவில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றார்.

அப்போது நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, கேப்டன் பிரபாகரன் படத்தில் ஏழு நாட்கள் நடந்த சண்டை காட்சியில் அவர் என்னை துவைச்சு எடுத்ததை விட நான் அவரை அதிகமாக துவைச்சுட்டேன். அந்த அளவுக்கு ஒரு புதுநடிகன் என்று எனக்கு கோ ஆப்ரேட் பண்ணி எனக்கு சொல்லிக் கொடுத்து அவர் நடிக்க வைத்தார்.

- Advertisement -

சண்டை காட்சியில் சூப்பர் சுப்பராயனை வைத்து ஏகப்பட்ட டிரெயினிங் எனக்கு கொடுத்து படத்தை எடுத்தனர். கேப்டனுக்கு தொடர்ந்து பைட் பண்ணி பண்ணி கை ஒரு பக்கமாக இறங்கிடும். எப்போதுமே செட்டை விட்டு கேப்டன் வெளியவே போக மாட்டார். மனிதர் எப்பவும் செட்டுக்குள்ளே தான் எல்லோருடனும் இருப்பார்.

பைட் காட்சியில் நடிப்பவர்களுடன் எப்போதுமே பேசிக்கொண்டு அவர்களுடன்தான் இருப்பார். சண்டை காட்சி அவரை மாதிரி பண்றதுக்கு யாரும் முன் உதாரணம் இல்லை. அவர் மாதிரி யாராலும் இருக்க முடியாது. ஒரே ஒரு எம்ஜிஆர் ஒரே ஒரு சிவாஜி கணேசன், அடுத்தது ஒரே ஒரு கேப்டன் அது விஜயகாந்த் தான். அவரை மாதிரி ஒரு நடிகர் தென்னிந்திய சினிமாவில் என் கண்ணுக்கு தெரிந்த வரை யாரும் இல்லை என்று அந்த விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்