- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை அவரது காலடியில் வைத்து வணங்க விரும்புகிறேன் - குணச்சித்திர...

எனக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை அவரது காலடியில் வைத்து வணங்க விரும்புகிறேன் – குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் நெகிழ்ச்சி!

- Advertisement -

உண்மையான உழைப்புக்கும் அபாரமான திறமைக்கும் பெரும்பாலும் சரியான அங்கீகாரமோ அடையாளமோ கிடைப்பதில்லை என்பது வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பலரது விரக்தியான மனநிலையாக உள்ளது. திறமை இல்லாமலும் உழைப்பு இல்லாமலும் சிலர் உயர்ந்த இடங்களுக்கு வரும்போது, அது பலருக்கும் இதுபோன்ற விரக்தியை ஏற்படுத்தி விடுகிறது.

இது சினிமா உலகிலும் இருந்து வருகிறது. அற்புதமான கதைகளுடன் உதவி இயக்குனர்கள் பலரும் வாய்ப்பின்றி தவிக்கும் சூழலில் கமர்ஷியல் படங்களை நட்சத்திர நடிகர்களை வைத்து இயக்கி கோடிக்கணக்கில் வருமானமும் புகழும் சம்பாதித்து கொண்டிருக்கும் சில இயக்குனர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

- Advertisement -

ஆனால் உண்மையான திறமையும் உழைப்பும் இருப்பவர்களுக்கு காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் அந்த அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்து விடும் என்ற ஒரு நம்பிக்கையை சமீபத்தில் ஏற்படுத்தியது நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகர் என்பதற்கான தேசிய விருதுதான்.

எம்எஸ் பாஸ்கர் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். அதன்பிறகு அவரது நடிப்பில் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மிக அற்புதமாக இவர் நடிக்கிறாரே என மனதார பலரும் பாராட்டிய நிலையில், பெரிய அளவில் அவரை தமிழ் சினிமா கொண்டாடவில்லை. ஆனால் பார்க்கிங் படத்தில் நடித்த அவருக்கு மத்திய அரசு தற்போது சிறந்த துணை நடிகர் தேசிய விருது அறிவித்து கெளரவப்படுத்தி உள்ளது.

- Advertisement -

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் தமிழ் உச்சரிப்பு குரலில் ஒரு கம்பீரம் வசன உச்சரிப்பில் காட்டும் நெளிவு சுளிவு உடல்மொழி என ஒரு தலைசிறந்த கலைஞனாக அவர் பல படங்களில் அவர் நிரூபித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் கூட அவரது நடிப்பில் தனித்துவம் அழகாக தெரியும். எந்த கேரக்டரையும் தன்வசப்படுத்தி கொள்ளும் திறமை மிக்க நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகர் தேசிய விருது குறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, எனக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை நடிகர் திலகம் சிவாஜியின் காலடியில் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவர் என்னை பெற்றெடுக்காத தந்தை. அவர் பல நடிகர்களுக்கு ஒரு அகராதி. எனவே இந்த விருதை அவரது காலடியில் வைக்க விரும்புகிறேன் என்று நடிகர் எம்எஸ் பாஸ்கர் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்