- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ அவதாரம் எடுத்த அடுத்த காமெடி நடிகர் முனீஷ்காந்த் - என்னதான் நடக்குது கோலிவுட்டில்…? ...

ஹீரோ அவதாரம் எடுத்த அடுத்த காமெடி நடிகர் முனீஷ்காந்த் – என்னதான் நடக்குது கோலிவுட்டில்…? – ஆச்சரியப்பட்ட சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆவது என்பது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டால் பலவிதங்களில் இயக்குனர் பார்த்து தகுதியான நபராக இருந்தால் மட்டுமே அவர் கதையின் நாயகனாக மாற முடியும். ஆனால் நடிகர் தனுஷ் வந்த பிறகு அழகான தோற்றம் கொண்டவர்தான் ஹீரோ என்ற பார்மூலா அப்படி துவம்சமாகி விட்டது.

ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று உருவக்கேலி செய்யப்பட்ட நடிகர் தனுஷ் ஒரு கட்டத்தில் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல நடிகராக மாறினார். இப்போது தயாரிப்பாளர் இயக்குனர் என ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார். உழைப்பும் திறமையும் இருந்தால் உருவம் முக்கியமில்லை என்பதற்கு நடிகர் தனுஷ் சிறந்த உதாரணம்.

- Advertisement -

அதே போல் கடந்த பல ஆண்டுகளாகவே காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். நாகேஷ் சந்திரபாபு துவங்கி கவுண்டமணி வடிவேலு விவேக் சந்தானம் சூரி சதீஷ் யோகிபாபு வரை காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோவாகி விடுகிறார்கள். இதில் சிலர் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

அந்த வரிசையில் காமெடி நடிகர் முனீஷ்காந்தும் இப்போது கதாநாயகனாக நடிக்கிறார். முண்டாசுப்பட்டி திருநாள் பேட்ட மகாராஜா மரகத நாணயம் ராட்சசன் குலேபகாவலி என பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த முனீஷ்காந்த் இப்போது ஒரு டைட்டில் வைக்காத படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தை லோகேஷ் குமார் என்பவர் டைரக்ட் செய்கிறார். கிராமத்து பின்னணியில் டார்க் காமெடி படமாக உருவாகும் படத்தில் ருத்ரன் பிரவீன் ராதிகா மவுரிஸ் தாஸ் அஸ்வின் நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் நடந்து முடிந்துள்ளது.

படம் குறித்து டைரக்டர் லோகேஷ் குமார் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் வட்டிக்கு கடன் என்பது வங்கியை தாண்டி மொபைல் ஆப் வரை வந்துவிட்டது. எளியவர்களுக்கு எளிதாக கிடைக்கும் கந்துவட்டி எப்படி அவர்களின் கழுத்தை நெரிக்கிறது என்பதை சுவாரசியமான சம்பவங்களுடன் காமெடி கலந்த திரைக்கதையில் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம் என்று கூறினார். முனீஷ்காந்த் நாயகனாக அறிமுகமாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால், அவரும் நடிகர் சூரியை தொடர்ந்து ஹீரோவாக மாறிவிடுவார்.

- Advertisement -

சற்று முன்